சுவிட்சர்லாந்தில் அதிவேகமாக கார் ஓட்டிய இந்தியர்களுக்கு அபராதம்

newsசுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் அங்கு வாகனங்களை ஒட்டுபோது அரசு குறிப்பிட்டுள்ள வேக வரம்பை மீறினால் அபராதம் செலுத்தும்படி அல்லது நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்படுகின்றார்கள்.

சொந்த நாட்டிற்குத் திரும்பியிருந்தாலும் அவர்களது வீடு தேடி இந்த உத்தரவுக் கடிதம் தரப்படுகின்றது. கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து, இதுபோல் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய இந்தியப் பயணிகளிடமும் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டிருக்கின்றது. தங்களை ஒத்த மும்பை காவல்துறையினருக்குத் தகவல் அளித்து, 9 ஆயிரம் முதல் 53 அயிரம் வரையிலான அபராதத் தொகைகள் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை காவல்துறையின் குற்றவியல் பிரிவு, சர்வதேச காவல்துறையின் குழுவாகவும் செயல்படுகிறது. எனவே, சுவிட்சர்லாந்தின் நீதிமன்ற உத்தரவுகள் இவர்களுக்கு அனுப்பப்படும். இங்குள்ள அயல்நாட்டுக் குற்றவாளிகளை அந்தந்த நாடுகளில் ஒப்புவிக்கும் பிரிவு, இந்த உத்தரவுகளை உரியவர்களிடம் சேர்க்கும். கடந்த 2008-ம் ஆண்டில், இதுபோன்று நான்கு அபராதத் தொகைகள் பெறப்பட்டன. 2009-ம் ஆண்டில், சந்தன் கண்ணா என்பவர் 9 ஆயிரத்து 58 ரூபாய் அபராதம் செலுத்தினார். 2011-ம் ஆண்டு ஜனவரியில் அமித் தன்னாலால் என்பவர் 37,743-ம், மே மாதம் அசித் மேத்தா என்பவர் 10,870-ம் செலுத்தியுள்ளனர். ஜூன் மாதம், முகம்மது இஸ்மாயில் லக்டாவாலா என்பவர் ரூ. 52,840 செலுத்தியுள்ளார்.

இந்த வருடம் மே மாதம் சச்சின் பரப் என்பவரிடம் 38,347-ம், நீரஜ் கயத்வால் என்பவரிடம் 48,311-ம் அபராதமாகப் பெறப்பட்டுள்ளது என்று மும்பை குற்றவியல் பிரிவின் இன்ஸ்பெக்டர் ஷாலினி ஷர்மா தெரிவித்தார். பொதுவாக, இந்தியப் பயணிகள் போக்குவரத்து விதிமுறை மீறல்களில் பிடிபட்டால், அங்கேயே அபராதத் தொகையினைச் செலுத்திவிடுவது வழக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: