2 மகள்களை கொன்று தந்தை தற்கொலை

ammaaசென்னை சூளை தட்டான்குளம் ஷேக்மோகன்லால் சவுத்ரி தெருவில் வசிப்பவர் பார்த்திபன் (38). பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மலர்விழி. இவர்களுக்கு பவித்ரா (5), சந்தியா (3) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். மலர்விழி தனது குழந்தைகளுடன் போரூர் அயப்பாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.தனது மனைவி- மகள்களை அழைத்து வருவதற்காக மாமியார் வீட்டுக்கு சென்ற பார்த்திபன் மகள்களை மட்டும் அழைத்துக்கொண்டு நேற்று மாலை வீடு திரும்பினார்.

இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியில் வசித்து வரும் பார்த்திபனின் தாய் மகனின் வீட்டுக்கு சென்றார். அப்போது பார்த்திபன் வீட்டில் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதையும், அவரது மகள்கள் பவித்ரா, சந்தியா இருவரும் வீட்டு அறையில் மயங்கி கிடந்ததை கண்டார்.உடனடியாக அவர்களை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி புளியந்தோப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரூபன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.பார்த்திபன் வீட்டில் விஷம் கலந்த குளிர்பானம் சிதறி கிடந்தது. மேலும் பிணங்களை கைப்பற்றி விசாரித்த போது 2 குழந்தைகளின் கழுத்தும் நெரிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: