உல்லாசத்துக்கு மறுத்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்

kodiyavanஆம்பூர் சின்ன கம்மார தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் இவரது மகள் ஜெயபிரதா(வயது14) ஆம்பூரில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 4-ந்தேதி பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற ஜெயபிரதா அதன்பின் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் காணவில்லை.

இதுகுறித்து ஜனார்த்தனன் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடந்த ஏப்ரல் மாதம் ஆம்பூர் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. அதில் நடந்த நாடகத்தில் நடித்த புதூர்நாடு நடுபேட்டையை சேர்ந்த காளி மகன் பரமசிவம்(26) என்பவருடன் ஜெயபிரதா பழகி வந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் பரமசிவத்தை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது புதூர்நாடு பகுதியில் மாணவியை கொலை செய்து பிணத்தை மலையில் வீசி விட்டதாக கூறினார். இதை தொடர்ந்து போலீசார் புதூர்நாடு பகுதிக்கு சென்று அழுகிய நிலையில் கிடந்த ஜெயபிரதாவின் பிணத்தை மீட்டனர்.kodiyavan

இதுதொடர்பாக போலீசார் பரமசிவத்தை கைது செய்தனர். கைதான பரமசிவம் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

ஆம்பூர் சின்னகம்மார தெருவில் தமிழ் புத்தாண்டு தினத்தன்று தெருக்கூத்து நடந்தது. இந்த நிகழ்ச்சியை மாணவி ஜெயபிரதா முதல் வரிசையில் உட்கார்ந்து பார்த்து ரசித்து கொண்டிருந்தார். அப்போது என்னுடைய ஆர்மோனிய வாசிப்பு ஜெயபிரதாவை மிகவும் கவர்ந்தது. இதனை பார்த்து கொண்டிருந்த நான் ஜெயபிரதாவிடம் எனது செல்போன் நம்பரை கொடுத்து அவரிடம் இருந்து அவரது தந்தை நம்பரை வாங்கினேன்.

கூத்து முடிந்த மறுநாள் என்னுடன் போனில் பேசினார். தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது என்பதை அவரிடம் மறைத்தேன். இதனால் எனது பேச்சில் ஜெயபிரதா மயங்கினார். அவரை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறினேன். இதில் மெய்மறந்த ஜெயபிரதா என்னுடன் அடிக்கடி போனில் பேசினார். அப்போது அவரிடம் நாம் இருவரும் ஜாலியாக ஏலகிரிமலைக்கு செல்லலாம் என்று கூறினேன்.

ஜெயபிரதாவும் வருவதாக சம்மதித்தார். கடந்த 4-ந்தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு திருப்பத்தூருக்கு வந்தார். பஸ் நிலையத்தில் காத்து கொண்டிருந்த நான் மோட்டார் சைக்கிளில் அவளை அழைத்து கொண்டு ஏலகிரிமலைக்கு சென்றேன். அங்கு இருவரும் ஜாலியாக சுற்றினோம். இரவில் ஏலகிரிமலையில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினோம். அப்போது ஜெயபிரதாவை உல்லாசத்துக்கு அழைத்தேன். அவர் மறுத்தார். ஆனால் நான் விடாமல் தொடர்ந்து வற்புறுத்தினேன். ஆனால் அவர் என்னுடைய ஆசைக்கு இணங்கவில்லை.

இதனால் நான் ஏமாற்றமடைந்தேன். கட்டாயபடுத்தினால் சத்தம் போடுவாள் பிரச்சினையாகி விடும். இதனால் காலையில் வேறு இடத்துக்கு அழைத்து செல்லலாம் என்று திட்டமிட்டேன். விடிந்ததும் ஏலகிரியை விட புதூர்நாடு மலை அழகாக இருக்கும் அங்கு செல்லலாம் என்று கூறி அங்கு அழைத்து சென்றேன். அங்கு அவளை ஆள்நடமாட்டம் இல்லாத நடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்றேன்.

அப்போது நான் மீண்டும் அவளை உல்லாசத்துக்கு அழைத்தேன். அவள் தொடர்ந்து மறுத்தாள். திருமணம் முடிந்ததும் சம்மதிக்கிறேன் என்று கூறினாள். இதனால் ஆத்திரமடைந்த நான் கழுத்தை நெரித்து ஜெயபிரதாவை கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: