புலிகளுக்கு சொந்தமான 1.2 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான சொத்துகள் பறிமுதல்

புலிகள் மீண்டும் தலை தூக்காமல் சர்வதேச மட்டத்தில் நடவடிக்கை:கோத்தபாயஇராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சொந்தமாயிருந்த 1பில்லியன் ரூபாவுக்கு கூடுதலான பெறுமதியுடைய சொத்துகள் பற்றிய விபரம் பயங்கர வாத புலனாய்வுத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட விசாரனைகளின் போது வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து அவை இந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பயங்கரவாத புலனாய்வுத் திணைக்கள மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் 1.2 பில்லியன் ரூபாவுக்குக் கூடுதலான பெறுமதியுடைய இத்தகைய சொத்துகளில் காணி, தொடர்மாடி மனைகள், அழுத்தகங்கள் (அச்சு இயந்திர சாலைகள்) வீடுகள், இயந்திரத் தொகுதிகள், ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் மீன் பிடி இழுவைப் படகுகள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன எனவும் அவை பகிரங்க ஏலத்தில் விற்கப்பட்டு அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் திறைசேரிக்கு மாற்றப்படும் எனவும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கள், கறுப்புப்பண செலாவணியாக்கல் ஆகியவை தொடர்பான சட்ட ஏற்பாடுகளின் பிரகாரமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குறித்த அதிகாரியின் கூற்றின் பிரகாரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்துகளில் ஒரு சில சொத்துகள் வெளியிடங்களில் அமைந்துள்ள அதேவேளையில் பெரும்பாலானவை கொழும்பிலேயே அமைந்துள்ளன. வெளிநாட்டு வங்கிக்கணக்கொன்றின் மூலம் 55 மில்லியன் ரூபாவுக்கு கூடுதலான தொகையையும் உள்ளூர் வங்கியொன்றின் மூலம் 30மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையும் இந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து அவர் மேலும் தகவல் தருகையில்; தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் ஏனைய பல நிலையான வைப்புக் கணக்குகளை வைத்திருந்தோர் குறித்து தாங்கள் கண்காணித்து வருவதாகவும் ஏனைய வங்கிக் கணக்குகளையும் விரைவில் கைப்பற்றவுள்ளோம். 1 பில்லியன் ரூபாவுக்கு கூடுதலான பெறுமதியான சொத்துகளையும் தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் வைப்பில் இட்டிருந்த மேலும் பல கணக்கு விபரங்களை கண்டறியும் பொருட்டு பயங்கரவாத புலனாய்வுத் திணைக்களம் வெளிநாட்டு புலனாய்வு முகவர் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றதெனவும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டிருந்த செயற்கையான முறையில் செய்யப்பட்ட தொடர்பாடல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சமீபமாகவுள்ள காணியொன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ள பிரதான சொத்துகளில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. மேற்படி விமான நிலையம் மீது தாக்குதல் ஒன்றை ஆரம்பிக்கும் முகமாகவே இந்தக் காணியை வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்துகளில் வெள்ளவத்தையில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பெயரில் வாங்கப்பட்டிருந்த 3 மாடிக் கட்டடம் ஒன்றும் கொட்டாஞ்சேனையிலுள்ள ஜம்பட்டா வீதியில் அமைந்துள்ள அச்சகம் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் நீலநாதன் அச்சகமும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: