கற்பழித்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி உயிரிழந்தார்

sirumiமகராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மணீஸ் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தின் 3-வது தளத்தில் இருந்து நேற்று காலை கதறல் சத்தத்துடன் புகையும் வருவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.

உடனே அங்கு சென்ற மக்கள், பள்ளி மாணவி உடல் முழுக்க எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், எரிந்த நிலையில் இருந்த அந்த பள்ளி மாணவியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அங்கிருந்து கத்தி, கேக்குகள், மது பாட்டில்கள், எரிந்த நிலையில் கிடந்த துணிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், 7-ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் காணாமல் போனது தெரியவந்தது.

அவள் காணாமல் போனது பற்றி அவளது பெற்றோர்கள் போலீசில் புகார் தெரிவித்து இருந்தனர்.

கற்பழித்து எரிக்கப்பட்ட அந்த மாணவி ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிருக்கு போராடி வந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இன்று மாலை மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: