1930-ம் ஆண்டு மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பிறந்தவர் டாக்டர் துவாரகநாத் கொட்னிஸ். இவர் 1938-ம் ஆண்டு நடந்த சீனா-ஜப்பான் போரின் போது, சீனாவுக்கு உதவ சென்ற இந்திய மருத்துவர் குழுவில் இடம் பெற்றார்.
இந்த குழு சீனா சென்று, போர்களத்தில் சீனர்களுக்கு மருத்துவ உதவி செய்தது.
பணிகாலம் முடிவடைந்த பின்னர் குழுவினர் இந்தியா திரும்பி விட்டனர். ஆனால், டாக்டர் துவாரகநாத் சீனாவில் கடும் பஞ்சம் நிலவிய போதும், அங்கு தங்கி இருந்து தனது சேவையை தொடர்ந்தார். இவர் 1942-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் மரணமடைந்தார்.
டாக்டர் துவாரகநாத்தை கவுரவப்படுத்தும் வகையில் மும்பை தாஜ் ஹொட்டலில் நேற்று பாராட்டு விழா நடந்தது. இதில் சீன பிரதமர் லீ கெகியாங் கலந்து கொண்டார்.
அப்போது அவர், ‘’நாம் பிரச்சினைகளை சந்திக்கும் போதுதான், யார் நமது உண்மையான நண்பர்கள் என்பது தெரிய வரும்’ என்று சீனாவில் ஒரு பழமொழி உண்டு.
அதுபோல ஜப்பானின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த நேரத்தில், இந்தியரான டாக்டர் துவாரகநாத் சீனாவுக்கு சேவையாற்றுவதில் தனது இளமை காலம் முழுவதையும் கழித்தார். அவர் ஒரு இந்தியன், ஆனால் அவர் ஒரு சீனரும் கூட. சீனாவின் தியாகத் தலைவர்கள் குடும்பத்தில் அவரும் ஒருவர். இந்திய-சீன நட்புறவுக்கு துவாரகநாத் ஒரு சின்னமாக திகழ்கிறார்’’ என்று கூறினார்.
Filed under: அனுபவம், அனைத்து பதிவுகளும், அனைத்தும், அரசியல், இணையதளம், இந்தியா, உழவன்۞, கதை, காங்கிரசு, காங்கிரஸ், செய்திகள், தமிழ்நாடு, Uncategorized |
மறுமொழியொன்றை இடுங்கள்