கள்ள நோட்டு குற்றவாளிகளுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு! ??

kaithuஈரோட்டில் மதுபானக் கடையில் கள்ளநோட்டு மாற்றிய குற்றவாளிகளுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள வீரபத்திர வீதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைக்கு 2 பேர் மது குடிக்க வந்தனர். பின்னர் அவர்கள் ரூ.500 நோட்டு கொடுத்து மதுபானம் வாங்கி கொண்டு பாரில் அமர்ந்து குடித்தனர்.

அப்போது டாஸ்மாக் விற்பனையாளருக்கு அவர்கள் கொடுத்த ரூ.500 நோட்டு கள்ளநோட்டு போல இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து விற்பனையாளர் வீரப்பன் சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் சம்பவ இடம் விரைந்து வந்து 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார். இதில் பிடிபட்டவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் முதல்நாடு பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 46). திருவண்ணாமலை மாவட்டம் பாப்பம்பட்டி பவித்ரம் பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தி (28) என்பதும், அவர்கள் கள்ளநோட்டு வைத்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து அவர்கள் மறைத்து வைத்திருந்த 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 48, 500 ரூபாய் நோட்டுகள் 7 ஆகியவற்றை கைப்பற்றப்பட்டன. கைதான ராஜீவ்காந்தி பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்குளுக்கு முன்பு அவர் அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடிக்க சென்றபோது முத்துராமலிங்கத்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த கள்ள நோட்டுகள் எங்கிருந்து வந்தது என்று விசாரித்தபோது பெருந்துறையில் உள்ள செல்வராஜ் என்பவரிடம் இருந்து வாங்கியதாக முத்துராமலிங்கம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர் சொன்ன முகவரியில் செல்வராஜை சென்று தேடிபார்த்தனர். ஆனால் அது போலி முகவரி என்பது தெரியவந்தது. இதற்கிடையே முத்து ராமலிங்கம் பற்றி விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

கடந்த 2007 ஆம் ஆண்டு முத்துராமலிங்கம் மீது விடுதலைப் புலிகளுக்கு பொருட்கள் கடத்தியதாக ராமநாதபுரம் கியூ பிரிவு காவல்துறை கைது செய்தனர். அதன்பின்னர் ஜாமீனில் வந்த அவர் தற்போது கள்ளநோட்டு வழக்கில் சிக்கியுள்ளார். எனவே இவரே ஈரோட்டில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கள்ள நோட்டு வழக்கில் முத்துராமலிங்கம் கைதான தகவல் அறிந்து கோவை சிபிசிஐடி காவல்துறையினரும் ஈரோடு வந்து விசாரணை நடத்தி சென்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: