ஒரு மாணவன் தற்கொலை, இரு மாணவிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி

visamஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் அருகே கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்த சேகர் மகன் சந்தோஷ், வயது–18. இவர் ஈரோடு கார்மல் மெட்ரிக் பள்ளியில் ப்ளஸ் 2 படித்தார். நேற்று முன்தினம் வெளியான தேர்வு முடிவில், இவர் இரு பாடத்தில் தேர்ச்சி பெறாததால், விரக்தியில் இருந்தார்.

நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரம், பேண்டுக்கு போடும் பெல்ட்டால் தனது கழுத்தை இருக்கி, தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.

இதேபோல், ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் அருகே உள்ள குட்டப்பாளையம், புதுக்காலனியை சேர்ந்த வீரசாமி என்பவரது மகள் பவித்ரா, வயது-18. இவர் எழுமாத்தூரில் உள்ள அரசு பள்ளியில் ப்ளஸ் 2 படித்தார். நேற்று முன்தினம் வெளியான ப்ளஸ் தேர்வில், பவித்ரா, 600 மார்க் எடுத்திருந்தார். இதனால், மனமுடைந்த பவித்ரா, வீட்டில் யாருமில்லாத சமயத்தில், எலியை கொல்ல பயன்ப

டும் விஷ மருந்தை மண்ணெண்ணெயில் கலக்கி குடித்து மயங்கினார். ஈரோடு, அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மொடக்குறிச்சி போலீஸார் விசாரிக்கின்றனர்.

இதேபோல, ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே வருத்தியாபாளையத்தை சேர்ந்த மதிவாணனின் மகள் மணிசர்மதி, வயது-18. இவரும், ப்ளஸ் 2 தேர்வில் மார்க் குறைவாக எடுத்த காரணத்தால், வீட்டில் யாருமில்லாத சமயத்தில் அரளி விதையை கடித்து துப்பியதில் மயங்கி கிடந்தார்.

இதை பார்த்த உறவினர்கள் இவரை ஈரோடு அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து கொடுமுடி போலீஸார் விசாரிக்கின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: