நவக்கிரகங்களை சுற்றிக்கொண்டிருந்த பக்தர் பலி

ammaaநாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள இராசிபுரம், நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை சூறாவளிக்காற்றுடன் மழை பொழிந்தது.

இதில், பல்வேறு இடங்களில் சாலையோரத்தின் நின்ற புளிய மரங்கள் முறிந்து விழுந்தது. அதேபோல், வீடுகளில் இருந்த ஓடுகளும் காற்றில் பறந்தன.

இந்த சூறாவளிக்காற்றில், மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் இருந்த பழைமையான ஆலமரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்தது. இப்போது, கோவிலில் பண்டிகை நடந்து வருவதால், சாமியை வழிபடுவதற்காக, அந்த சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த மழை பெய்தபோது கோவிலில் தங்கியிருந்தனர்.

அப்போது, பக்கத்தில் இருந்த நவகிரகங்களை சுற்றிக் கொண்டிருந்த இராஜேந்திரன், வயது-55, என்பவர் தலையில், ஆலமரத்தின் கிளை ஒடிந்து விழுந்தது.

இதில் தலையில் படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, இராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: