பா.ஜ.க.வால் மட்டுமே இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும்

mulli_01இலங்கைக் கடற்படையால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து, திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலகம் எதிரில் பாஜக மீனவர் அணி சார்பில் திங்கள்கிழமை  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசியச் செயலாளர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.

 

பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் என பா.ஜ.க. தேசியச் செயலாளர் டாக்டர். தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

 

மாநில நிர்வாகி கே.கணேசன், மாவட்டப் பொருளாளர் வி.வெங்கடகிருஷ்ணன், நகரத் தலைவர் த.ஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் பேசியது:

 

இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வுக்கு வீடு கட்டித் தர இந்தியா உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த வீடுகளில் தமிழர்கள் யாரும் குடியமர்த்தப்படவில்லை.

 

சிங்களர்கள், இலங்கை ராணுவத்தினர்தான் தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மக்களவையில் தி.மு.க.வினர் கோரிய தீர்மானத்திற்கு ஆதரவு தரவில்லை என்பதற்காக பா.ஜ.க. இந்த விஷயத்தில் இலங்கை தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என புகார் கூறப்பட்டது. இலங்கை பிரச்னையைப் பொறுத்தவரை 9 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க.வின் நிலை வேறு. இனப்படுகொலைக்குப் பிறகு பா.ஜ.க.வின் தற்போதைய நிலை வேறு. தற்போதைய காங்கிரஸ் அரசால் இலங்கைத் தமிழர்களை மட்டுமல்ல, இந்திய மீனவர்களைக்கூட காப்பாற்ற முடியவில்லை. 1.40 லட்சம் பேரைக் கொன்ற கொடூரத்தைக் கண்டிக்க காங்கிரஸ் அரசால் முடியவில்லை.

 

நாடாளுமன்றத்தில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாகத் திகழும் பா.ஜ.க.வினால் மட்டுமே இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு விடிவு காலம் பிறக்கும் என்றார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: