11 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண் திரும்ப வந்தார்

pen_வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கண்டிப் பேடு, ஒட்டந்தாங்கலை சேர்ந்த சுசீலா என்பவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய பெற்றோர் மற்றும் கணவன்-குழந்தைகளை விட்டு விட்டு மாயமானார். அப்போது அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். அவரை அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்ந நிலையில் காணாமல் போன சுசீலா கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள விஸ்வாசத மனேவில் (நம்பிக்கை இல்லம்) அடைக்கலம் ஆனார். அங்கு அவரது பெயர் மற்றும் குடும்ப விவரங்களை தெரிந்து கொண்ட நிவாகிகள் தீபக், எட்வர்டு, எலிசபெத் ஆகியோர் அந்த பெண்ணை அவரது குடும்பத்தாருடன் ஒப்படைக்க விரும்பினார்கள்.

இதை தொடர்ந்து வேலூரில் உள்ள உதவும் உள்ளங்கள் தலைவர் சந்திரசேகரனை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்தனர். பின்னர் வேலூர் வந்த அந்த குழுவினர் உதவும் உள்ளங்கள் அமைப்பினருடன் அந்த பெண்ணின் சொந்த கிராமமான ஒட்டந்தாங்கலுக்கு சென்றனர்.

இதற்கிடையே 11 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது மகள் வர இருப்பதை அறிந்ததும் அவரது தாயார் பாஞ்சாலை, கணவர் சீனிவாசன், மகன் கார்த்திகேயன் ஆகியோர் மகிழ்ச்சியடைந்தனர். அவர்களது சொந்த பந்தங்களும் வீட்டில் கூடினர். அவர்கள் சுசீலாவை கட்டி அணைத்து முத்தமிட்டு வரவேற்றனர்.

இது குறித்து உதவும் உள்ளங்கள் அமைப்பினர் கூறும்போது, சுசீலாவை தொடர்ந்து தஞ்சை, மதுரை கோவையில் காணாமல் போன 3 பேரை அவர்களது உறவினர்களிடம் சேர்க்க இருக்கிறோம் என்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: