ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்தனர்: சிறுமி பலி

visamமாதவரத்தை அடுத்த பொன்னியம்மன் மேடு கற்பகம் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 37). சக்திவேலின் சொந்த ஊர் திண்டிவனம். இவரது மனைவி வனிதா (30). இவர்களது மகன் அரி. மகள்கள் இரட்டையர்கள் மோகனபிரியா, மோனிகா (7). இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படிப்பு வந்தனர்.   நேற்று இரவு அரி பாட்டி வீட்டிற்கு தூங்க சென்றுவிட்டான். மற்ற 4 பேரும் வீட்டில் இருந்தனர். நள்ளிரவில் சாப்பாட்டில் விஷத்தை கலந்து கணவன்- மனைவி இருவரும் தூங்கிக் கொண்டு இருந்த மகள்கள் மோகனபிரியா, மோனிகாவை எழுப்பி கொடுத்தனர். பின்னர் மீதி இருந்த சாப்பாடை சக்திவேலும், வனிதாவும் சாப்பிட்டனர்.   சிறிது நேரத்தில் வயிற்று வலியால் 4 பேரும் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கணவன்- மனைவி உள்பட 4 பேரும் விஷம் குடித்து உயிருக்கு போராடியபடி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.   உடனடியாக அவர்களை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகனபிரியா பரிதாபமாக இறந்தாள்.   மற்ற 3 பேரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரி பாட்டி வீட்டில் தூங்கியதால் தப்பினான்.   இதுகுறித்து மாதவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

சக்திவேலுக்கு கடன் கொடுத்தவர்கள் யாரேனும் மிரட்டினார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்த சம்பவம் மாதவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: