சவுதியில் பொது இடத்தில் தலையை வெட்டி தண்டனை வழங்குதல் கைவிடப்படுமா?

Mideast Saudi Arabia Eid Al Fitrசவுதி அரேபியாவில் குற்றவாளிகளுக்கு பொது இடத்தில் தலையை வெட்டி மரணதண்டனை வழங்கும் நடைமுறை விரைவில் கைவிடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பில் சவுதியின் முக்கிய அமைச்சர்கள் பலர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொது இடத்தில் தலையை வெட்டி படுகொலைசெய்வதற்கு பதிலாக துப்பாக்கியால் சுட்டு தண்டனை நிறைவேற்றும் நடைமுறையை சவுதி அமுல்படுத்தலாம் என அவ்வூடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் தலையை வெட்டி படுகொலை செய்வதற்கு பதிலாக விஷ ஊசி ஏற்றி தண்டனை நிறைவேற்றும் படி சவுதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் உத்தியோகபூர்வ செய்திகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

சவுதியில் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு மரண தண்டவை நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

மேலும் சவுதியில் மட்டுமே பொது இடத்தில் வைத்து தலையை வெட்டு மரண தண்டவை நிறைவேற்றப்படுகின்றது.

இவ்வருடத்தில் இதுவரை 15 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டில் 79 பேரும், 2012 ஆம் ஆண்டில் 76 பேரும் அங்கு மரணதண்டனைக்கு உள்ளாகியிருந்தனர்.Mideast Saudi Arabia Eid Al Fitr

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: