தொலைத்த தமது உறவுகளை மீட்டுத் தரக் கோரிய உறவுகளின் உள்ளக் குமுறல்கள் ஒளி வடிவில்…..

vidivuவடக்கு கிழக்கில் கைது செய்யப்பட்டு தடுப்பில் உள்ள மற்றும் காணாமற்போன உறவுகளை மீட்டுத் தரக்கோரி கொழும்பில் நேற்று இடம்பெறவிருந்த போராட்டத்திற்குச் சென்ற நூற்றுக்கணக்கான மக்கள் பொலிஸாரினால் நேற்றுமுன்தினம் இரவு வவுனியாவில் தடுக்கப்பட்ட நிலையில், அவ்விடத்திலேயே தமது போராட்டத்தை மேற்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து நேற்றுக்காலை நகரசபை மைதானத்தில் ஒன்றுகூடி ஆர்ப்பரித்து ஊர்வலமாக மாவட்டச் செயலகம் சென்று மகஜர் கையளிக்கச் சென்றவேளை, அதனை பெற மாவட்டச் செயலர் வருகை தராத நிலையில் வீதியில் அமர்ந்திருந்து மக்கள் தமது ஆறொணாத் துயரத்தை வெளிப்படுத்தினர். இவ் இரண்டு நிகழ்வுகளிலும்

உறவுகளின் உள்ளக் குமுறல்கள் ஒளி வடிவில்…..

"என்பிள்ளை எங்கே கொண்டுவா என்னிடத்து" கதறியழும் தந்தை ஒருவர். வவுனியாவில் நேற்று முன்தினம் இரவு காணமற்போன தமது உறவுகளை மீட்டுத்தரக் கோரி ஆர்ப்பரித்த மக்கள் கூட்டத்தில், தனது பிள்ளையைக் கேட்டுக் கதறியழுத தந்தை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s