விவசாயிகள் உணர்ச்சியற்ற பிண்டங்கள்

Vaithilingam-orathanadu-mla-தஞ்சாவூரில் சம்பா பயிர் கருகியதற்கு இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் விவசாயிகளை கடுமையாக திட்டி பேசியதால் பரபரப்பு நிலவியது.

தமிழக அரசின் நிவாரண நிதியை வழங்கிவிட்டு வைத்தியலிங்கம் பேச ஆரம்பித்தார். அவரது பேச்சுக்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்த விவசாயிகள் யாரும் கைதட்டவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த வைத்தியலிங்கம், கைதட்டுமாறு விவசாயிகளை நோக்கி வசைமாறி பொழிந்தார். அறிவில்லாதவர்கள், உணர்ச்சியற்ற பிண்டங்கள் என்று திட்டியதால் விவசாயிகள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.Vaithilingam-orathanadu-mla-

மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் அரசு நிவாரணம் வழங்குகிறது. இதனை மறந்து ஏதோ தனது சொந்தப் பணத்தை தருவதுபோல் அமைச்சர் வைத்தியலிங்கம் பேசுவது கண்டனத்துக்கு உரியது. அவரது பேச்சு அவர் வகிக்கும் அமைச்சர் பொறுப்புக்கு ஏற்றது அல்ல. இவருக்கு செல்வாக்கு இருந்தால், முதல் அமைச்சரிடம் பேசி கூடுதல் நிவாரணம் வாங்கித் தர வேண்டும். அதைவிடுத்து விவசாயிகளை கடுமையான வார்த்தைகளால் திட்டியதற்கு எங்களது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். ஒன்றுமே செய்யாமல் கைதட்ட சொல்வது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது. விவசாய சங்கங்கள் எல்லாம் அடுத்தக்கட்ட போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நேரத்தில் இவர்களுக்கு கைதட்ட சொல்கிறார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சருக்கே விவசாயிகளின் நிலைமை தெரியவில்லை என்பது வேதனை அளிக்கிறது என்று தஞ்சை சேர்ந்த விவசாய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த பக்கிரிசாமி கூறினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: