வீணடிக்கபட்ட வாய்ப்புக்கள் – ‘வொசிங்டன் போஸ்ட்’ கவலை

usaஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும், வெளிப்படையாகவும் திரும்பத் திரும்பவும் கண்டித்தபோதும், அந்த வார்த்தைகள் எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்குபேலவே அமைந்துள்ளது. இது இன்னும் ஆபத்துகளையே உருவாக்கும் இவ்வாறு எச்சரித்திருக்கிறது அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘வொசிங்டன் போஸ்ட்‘ நாளிதழ்.

‘சிறிலங்காவின் வீணடிக்கப்பட்ட வாய்ப்புகள்‘ என்ற தலைப்பில் நேற்று எழுதியிருந்த ஆசிரியர் தலையங்கத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு, இலங்கைத் தீவின் சிறுபான்மை தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த போராளிகளுடனான 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் அவர்களை வென்றது.

அந்தப் போருக்கான செலவு கொடூரமானதாக இருந்தது.

இறுதிப்போரின்போது 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா விசாரணைகளில் கண்டறியப்பட்டது.

ஆனால், போர் வெற்றி ராஜபக்சவை பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் மத்தியில் ஒரு கதாநாயகனாக உயர்த்தியது.

அதேவேளை, தனது நாட்டை, இனமுரண்பாடுகளைக் குணப்படுத்தி நவீனப்படுத்தும் வாய்ப்பையும் அவருக்கு கொடுத்தது.

துரதிஸ்டவசமாக, சிறிலங்கா ஜனாதிபதியும் அவரது குடும்பமும், கிடைத்த வாய்ப்புக்கு எதிர்முனையில் செல்கின்றனர்.

எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளை பிளவுபடுத்தி, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொண்டு, இரண்டு முறைப் பதவிக்காலம் என்ற சிறிலங்கா ஜனாதிபதியின் வரையறையை மாற்றும் வகையில், அரசியலமைப்பைத் திருத்தி எழுதியது ஆளும்கட்சி.

அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்கள், சமூக அமைப்புகள், நீதித்துறையினர் அச்சுறுத்தப்படுவதுடன், சிலவேளைகளில் அரசாங்க ஆதரவு குண்டர்களால் தாக்கப்பட்டும் உள்ளனர்.

எந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி பல ஆயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அரச பாதுகாப்புப் படைகளால் தொடர்ந்தும் தமிழ் செயற்பாட்டாளர்கள் சித்திரவதை, பாலியல் தாக்குதல் உள்ளிட்ட முறைகளிலும் துன்புறுத்தப்படுவதாகவும், மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.

போரின் இறுதி மாதங்களில், இடம்பெற்றிருக்கலாம் என்று கருதப்பட்ட மீறல்கள் குறித்து தீவிரமான விசாரணைகளை நடத்துமாறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையால் கோரப்பட்ட போதிலும், சிறிலங்கா அரசாங்கம் அதை செய்யவில்லை.

காணாமற்போனவர்களைக் கண்டுபிடிக்கவோ, காணாமற்போனவர்கள் குறித்து விசாரணை நடத்தவோ, எந்தப் பொறிமுறையும் உருவாக்கப்படவில்லை, எவரும் கைது செய்யப்படவோ நீதியின் முன் நிறுத்தப்படவோ இல்லை என்று கடந்தவாரம், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை,தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டு ராஜபக்ச தவறான திசையில் மேலும் இரண்டு பாரிய அடிகளை எடுத்து வைத்தார்.கருணை இல்லாத கருணாநிதியே….

கடந்தமாதம், அவர், நீதித்துறைச் சுதந்திரத்தை முடக்கும் வகையில், உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசரைப் பதவிநீக்கி விட்டு, அவரது இடத்துக்கு தனக்கு நெருக்கமான ஒருவரை நியமித்தார்.

அரசியலமைப்பு உத்தரவாதப்படுத்திய உள்ளூர் அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும், ராஜபக்சவின் சகோதரர் ஒருவரால் கொண்டு வரப்பட்ட பொருளாதார அபிவிருத்தித் திட்டத்துக்கு, உயர்நீதிமன்றம் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்தே, சிறிலங்கா அதிபரின் பெரும்பான்மை பலம் வெளிப்படுத்தப்பட்டது.

வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையினரான தமிழர்களின் நியாயமான விருப்பங்களை ஈடுசெய்யும் வகையில், உள்ளூர் சுயாட்சி ஒன்றை விரிவாக்குவதாக சிறிலங்கா ஜனாதிபதி வாக்குறுதி கொடுத்திருந்தார்.

ஆனால், இந்த மாதம் கொண்டாடப்பட்ட சிறிலங்காவின் சுதந்திரதின நிகழ்வில் உரையாற்றிய அவர், அந்த உறுதிமொழியை மீறிவிட்டார்.

சிறிலங்கா அரசாங்கம் தற்போது, உள்ளூர் உரிமைகளை தொடர்பான அரசியலமைப்பு ஏற்பாடுகளை நிராகரிப்பதான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறது.

ராஜபக்சவின் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை அமெரிக்காவும், மேற்குலக அரசுகளும், வெளிப்படையாகவும் திரும்பத் திரும்பவும் கண்டித்தபோதும், அந்த வார்த்தைகள் எல்லாமே செவிடன் காதில் கூறியதாகி விட்டது.

வரும் நவம்பரில் மதிப்புமிக்க கொமன்வெல்த் சமூகத்தின் மாநாட்டை, சிறிய நாடான சிறிலங்கா நடத்தவுள்ள நிலையில், நாடுகள் சில அதைப் புறக்கணிக்கலாம் என்கிறது மனிதஉரிமைகள் கண்காணிப்பகம்.

மாநாட்டை கொழும்பில் இருந்து அகற்றுவதென்று மிரட்டுவதன் மூலமோ அல்லது மாநாட்டைப் புறக்கணிப்பதான அறிவிப்பின் மூலமோ, பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகள், அவரது கொள்கைகளை ஜனநாயக நாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற தெளிவான ஒரு செய்தியை ராஜபக்சவுக்கு அனுப்ப முடியும் – என்றுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: