”சாதி-மதத்தை சேர்ந்தவர்கள் வழக்கு போடுவதால், இனிமேல் ஈக்களையும், கொசுக்களையும் வைத்துதான் படம் தயாரிக்க முடியும்” என்று டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் வேதனையுடன் குறிப்பிட்டார்.
வினய், பிரேம்ஜி, சத்யன், அரவிந்த், பவர் ஸ்டார் சீனிவாசன், லட்சுமிராய் ஆகியோர் நடித்துள்ள ‘ஒன்பதுல குரு’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் நடந்தது. விழாவில் நடிகர் விஜய் கலந்துகொண்டு பாடல்களையும், டிரைலரையும் வெளியிட்டார்.
விழாவில், டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:- ”இப்போதெல்லாம் படம் எடுக்கவே பயமாக இருக்கிறது. அப்படியே படம் எடுத்தால், வில்லன் எந்த சாதியை சேர்ந்தவராகவும் இருக்கக் கூடாது. எந்த மதத்தை சேர்ந்தவராகவும் இருக்கக் கூடாது. அவர் வக்கீலாகவும் இருக்கக் கூடாது. போலீசாகவும் இருக்கக் கூடாது. டாக்டராகவும் இருக்கக் கூடாது. இதில் ஏதாவது ஒருவராக இருந்தால், அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் வழக்கு போட்டு விடுவார்கள். மிருகங்களை வைத்து படம் எடுத்தால், விலங்குகள் நல வாரியத்தை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்து விடுகிறார்கள்.
இனிமேல் ஈ, கொசு, கரப்பான் பூச்சியைத்தான் வில்லனாக போட்டு படம் தயாரிக்க முடியும்.” இவ்வாறு டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் வேதனையுடன் பேசினார்.
Filed under: திரைப்படங்கள், Uncategorized |
மறுமொழியொன்றை இடுங்கள்