சற்று முன் வீதியில் கொல்லப்பட்ட ஈரானிய ‘ரகசிய’ தளபதி

Hassan-Shateriஇன்று (வியாழக்கிழமை) சற்றுமுன் சிரியாவில் இருந்து லெபனான் செல்லும் வீதியில் காரில் சென்று கொண்டிருந்த ஈரானிய அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். இந்த தகவலை லெபனானில் உள்ள ஈரானியத் தூதரகம் அறிவித்தது. கொல்லப்பட்ட நபர், சாதாரண அதிகாரி அல்ல என்பது, கொலை நடந்த சிறிது நேரத்திலேயே தெரிந்துவிட்டது.

டமாஸ்கஸ் நகரில் இருந்து, பெய்ரூட் செல்லும் வீதியில் வைத்து இந்த கொலை நடந்ததாக குறிப்பிட்ட ஈரானிய தூதரகம், “இது ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளின் வேலை” என்றும் தெரிவித்தது.

லெபனானில் உள்ள ஈரானியத் தூதரகம் இப்படியொரு ஸ்டேட்மென்டை விடுத்தவுடன், “ஆயுதம் ஏந்திய தீவிரவாதி கொல்லும் அளவுக்கு இந்த ஈரானிய அதிகாரி யார்? என்ற கேள்வி மீடியாக்களில் எழுந்தது.

ஹிஸ்பொல்லா அமைப்புக்கு சொந்தமான அல்-மனார் டி.வி. சேனல், “கொல்லப்பட்ட நபரின் பெயர், ஹசம் கோஷ் நூவிஸ். இவர் லெபனான் எல்லையை அடையும் முன்னர், சிரியா மண்ணில் வைத்தே கொல்லப்பட்டார்” என்றது.Hassan-Shateri

லெபனானுக்குள் கொல்லப்பட்டிருந்தால், ஹிஸ்பொல்லாவுக்கு கெட்ட பெயர் என்பதால், கொலை நடந்தது சிரியாவில் என்பதற்கு அழுத்தம் கொடுத்து தற்போது பிரேக்கிங் நியூஸ் வெளியிட்டு கொண்டிருக்கிறது அல்-மனார் டி.வி. சேனல்.

ஆனால், அதற்குமேல் இந்த ஹசம் கோஷ் நூவிஸ் என்ற ஈரானியர் யார்? அவர் எதற்காக லெபனான் வந்து கொண்டிருந்தார் என்பது பற்றி மூச்சு விடவில்லை.

இதற்கிடையே ஈரானிய வெப்சைட் மாஷ்ரெக்ஹ்.காம், கொல்லப்பட்டவர் ஜெனரல் ஹசன் ஷாடேரி என வேறு பெயரை குறிப்பிட்டுள்ளது.

இந்த தகவல் உண்மையானால், ஜெனரல் ஹசன் ஷாடேரி யார் என்பது பற்றிய தகவல்கள் உள்ளன. ஈரானின் ரகசிய பாதுகாப்பு படைப் பிரிவான Guard’s Quds Force-ல், இந்த பெயரில் ஒரு தளபதி உள்ளார். (மேலே போட்டோவில் உள்ளவர்) கொல்லப்பட்ட நபர் அவரா தெரியவில்லை.

இந்த Guard’s Quds Force பிரிவுதான், ஈரானிய அரசுக்காக வெளிநாடுகளில் ஆட்களை ‘மேலே’ அனுப்பி வைக்கும் படை. ஈரானிய அரசுக்கு எதிராக வெளிநாடுகளில் குரல்கொடுக்கும் பலர் கொல்லப்படுவதன் பின்னணியில் உள்ளது இவர்கள்தான்.

இதற்கிடையே மற்றொரு தகவல் தற்போது கிடைத்துள்ளது. Guard’s Quds Force பிரிவின் தலைவர் ஜெனரல் காசெம் வொலெய்மானி சற்று நேரத்துக்கு முன் ஹெலிகாப்டரில் டமாஸ்கஸ் நகரில் வந்து இறங்கியுள்ளார். வீதியில் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க இவர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Guard’s Quds Force பிரிவின் தலைவரே ஆறுதல்கூற வருகிறார் என்றால், கொல்லப்பட்ட நபர் அல்-மனார் டி.வி. சேனல் கூறும் ஆளல்ல, இவர் ஜெனரல் ஹசன் ஷாடேரிதான்.

சில மணிநேரம் விட்டு பார்க்கலாம், கதை எப்படி திரும்புகிறது என்பதை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: