சட்டசபையில் சூப்பர் சண்டைக் காட்சி! விஜயகாந்த் எம்.எல்.ஏ.க்கள் பாய்ந்து பாய்ந்து அடித்தனர்!!

vijayakanthஆக்ஷன் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜயகாந்தின் கட்சி எம்.எல்.ஏ.க்கள், அற்புதமான ஸ்டன்ட் காட்சி ஒன்றை சட்டசபையில் அரங்கேற்றி, அனைவரையும் மகிழ்வித்தனர். “தற்போது வெளியாகும் திரைப்படங்களில்கூட இதுபோன்ற அருமையான சண்டைக் காட்சியை பார்த்ததில்லை” என பார்த்தவர்கள் சிலாகித்துக் கொண்டனர்.

சண்டையின் முடிவில், காயமடைந்த தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அனகை முருகேசன் என்ற தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வின் சட்டை கிழிந்தது. மற்றையவர்களுக்கு உட்காயங்கள், இடுப்பு வலி, மூட்டு நோவு ஆகியவை ஏற்பட்டன.

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சிறப்பு சண்டைப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டதாக தகவல் ஏதும் இதற்குமுன் வெளியாகியிருக்கவில்லை.vijayakanth

இன்றைய சண்டைக் காட்சியின் பிளாஷ்-பேக் என்ன?

சில மாதங்களுக்கு முன்பு திட்டக்குடி தமிழழகன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், மதுரை மேற்கு சுந்தரராஜன், பேராவூரணி நடிகர் அருண் பாண்டியன் ஆகிய நான்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏக்களும் முதல்வர் ஜெயலலிதாவை அடுத்தடுத்துப் சந்தித்து, அ.தி.மு.க. ஆதரவாளர்களாக மாறினர். அதற்காக அ.தி.மு.க.வுக்கு சென்று விடாமல், தற்போதும் அதிருப்தி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.களாகவே உள்ளனர்.

இன்று சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திட்டக்குடி தமிழழகன் பேசினார்.

அவர் பேசும்போது, “நான் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து எனது தொகுதிப் பிரச்சினைகள், குறைகள் குறித்து முறையிட்டேன். பல கோரிக்கைளை வைத்தேன். அவற்றை முறையாகப் பரிசீலித்தார் முதல்வர், முடிந்தவரை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்தார்.

முதல்வரைப் பார்தது விட்டு வந்த பின்னர்தான் எனது தொகுதிகளில் இப்போது பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. எனவே என்னைப் போலவே மற்ற தே.மு.தி.க. எம்.எல்.ஏக்களும் முதல்வரைச் சந்திக்க வேண்டும், தங்களது குறைகளைக் கூற வேண்டு்ம். அவற்றை நிறைவேற்ற முதல்வர் காத்திருக்கிறார்” என்றார்.

இதைக் கேட்டதும் டென்ஷன் ஆனார்கள் தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள். தே.மு.தி.க. உறுப்பினர் வெங்கடேசன் குறுக்கிட்டு தமிழழகனை கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

கைகலப்பு தொடங்கியதும், மற்றைய தே.மு.தி.க. உறுப்பினர்கள் தத்தமது சீட்களில் இருந்து குபீரென பாய்ந்தனர். தமிழழகனைத் தாக்க ஓடினர்.

இதைப் பார்த்த தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், தமிழழகனை யாரும் அடித்து விடாமல் தடுக்க வியூகம் அமைத்தார்.

அங்கேதான் விதி சிரித்தது.

காப்பாற்ற போன மைக்கேல் ராயப்பன், வீர முழக்கமிட்டு ஓடிவந்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கனிள் கைகளில் சிக்கிக் கொண்டார்.

அவரை கேப்டன் விஜயகாந்தின் எம்.எல்.ஏ.க்கள் சரமாரியாக அடித்து உதைக்க தொடங்கினர்.

என்ன இருந்தாலும், மைக்கேல் ராயப்பனும் கேப்டனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லவா? அவருக்கும், குங்ஃபூ, கராத்தே எல்லாம் தெரியும் போலிருக்கிறது. தன்னைத் தாக்கிய தே.மு.தி.க. எம்.எல்.ஏக்களை மைக்கேல் ராயப்பனும் பதிலுக்குத் தாக்க தொடங்கினார்.

மைக்கேல் ராயப்பனின் வேகத் தாக்குதலில், அனகை முருகேசன் என்ற தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வின் சட்டை கிழிந்து தொங்கியது.

இருந்தாலும் தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், மைக்கேலால் தனியாக சமாளிக்க முடியவில்லை. இதனால் அவருக்குத்தான் கடகடவென நிறைய அடிகள் விழுந்தன.

உடனடியாக அவைக் காவலர்களை அழைத்த சபாநாயகர் தனபால், தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து அதிருப்தி தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் தவிர மற்றவர்களை அவை காவலர்கள் வெளியேற்றினர்.

காயமடைந்த மைக்கேல் ராயப்பன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்த வன்முறைத் தாக்குதல் நடந்தபோது முதல்வர் ஜெயலலிதாவும் அவையில் இருந்தார். இந்த சண்டைக் காட்சியை அத்தனை உறுப்பினர்களும் பரபரப்புடன் வேடிக்கை பார்த்தனர்.

கேப்டனின் எம்எல்.ஏ.க்களின் சண்டைக் காட்சிகள் அரங்கேறிய நேரத்தில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் சபையில் இல்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: