சாதித்தார் கமல்! 300 கோடிக்கு மேல் வசூல் ரிலீஸுக்கு முன்பே!!

kamal-recordஇது யாருமே எதிர்பார்க்காத உலக சாதனை. நிகழ்த்தியவர் வேறு யாருமில்லை நம் உலக நாயகன் தான். ஏர்டெல் நிறுவனம் மட்டும் நேற்று 30 லட்சம் முன்பதிவைத் தொட்டிருப்பதாய் தெரிவித்திருக்கிறது, விஸ்வரூபத்திற்காக. அதாவது 30 லட்சம் x 1000 = 300 கோடிகள்.

இதில் பாதிப்பேர் தமிழுக்கு புக்கிங், தமிழுக்கு 500 என்று வைத்துக்கொண்டாலும் 200 கோடிகளை தாண்டுகிறது. இது வெறும் ஏர்டெல் கணக்கு. இன்னும் 6 dth நிறுவனங்களும் இருக்கு. எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் ரிலீஸுக்கு முன்பே 500 முதல் 1000 கோடியை வசூல் பண்ணலாம் விஸ்வரூபம். இது இதுவரை உலக அளவிலேயே எந்த திரைப்படமும் செய்திராத சாதனையாய் இருக்கும்.

கமலுக்கு வியாபாரம் தெரியாது, தியேட்டர்காரர்களை பகைத்துக்கொள்கிறார், படம் சரியாய் எடுக்கவில்லை அதனால் முன்பே கிடைக்கிற பணத்தை சுருட்டப்பார்க்கிறார்.. இப்படி பலவித விமர்சனங்களைக் கக்கிக்கொண்டிருந்தவர்களெல்லாம் இப்போது வாயடைத்து, இது உண்மையா?, நிஜமாவா என கேட்கும் நிலையை உருவாக்கிவிட்டார் கமல் ஹாஸன்.

50 ரூபாய் டிக்கெட்டை 200 ரூபாய்க்கு விற்று, படம் எடுத்தவர்களுக்கு காசு வராமால், தாங்களே சுருட்டிக்கொண்டு நஷ்டக்கணக்கு காட்டும் தியேட்டர்களுக்கு மத்தியில், இப்படி தெள்ளத்தெளிவாய் வியாபாரம் நடக்கும் டி.டி.எச் சேவை மூலம் தன் சொந்தக்காசை போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு கட்டாயம் லாபம் தான் என ஆணித்தரமாய் நிரூபித்ததோடில்லாமல், அந்த லாபம் இதுவரை வந்ததை விட பல மடங்கு அதிகமாய் இருக்கும், அது திரைத்துறையை இன்னும் புத்துணர்வூட்டி ஆரோக்யமாக்கும் என முகத்திலடித்து புரியவைக்கிறார் கமல்.

ஒரு உதாரணத்திற்கு இந்தியாவின் வசூல் மன்னன் சல்மான் கானின் தபங் 2 படம் ஆறு நாளில் 100 கோடியே வசூல் செய்தது இந்திய அளவில் இதுவரை தொடமுடயாமலிருந்து தொட்ட சாதனையென்பதை நாமே சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம். அதேபோல சென்ற வாரத்தில் ரிலீஸான ஹாலிவிட்டின் சூப்பர் ஸ்டார் டைரக்டரான குவென்டின் டாரண்டினோவின் ஜாங்கோ படம் முதல்நாளில் 82 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இப்பொது இந்த செய்தியின் தலைப்பை மறுபடி படியுங்கள். கமலின் சாதனையின் வீரியம் நமக்குப் புரியும். இனி இவரை திட்டிக்கொண்டிருந்தவர்களும் இது எப்படி என விசாரித்து தங்கள் படங்களிலும் இப்படி வெற்றி பெற உபயோகப்படுத்திக்கொள்வார்கள். அவர்கள் வெளியே சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவர்களின் தாங்கஸ் கார்டுகளில் முதலில் கமலின் பெயர் இருக்கும்.
kamal-record

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: