இலங்கையில் தாய்ப்பால் வங்கி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சுகாதார கல்விப்பணியகத்தின் கவனம் திரும்பியுள்ளதாக தேசிய போஷாக்கு தொடர்பான இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டுக்கான உலக தாய்ப்பாலூட்டல் தொடர்பான ஆய்வின் இலங்கை அறிக்கை வெளியிடும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றபோதே இத் தகவலை அவர் தெரிவித்தார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், தொழில்புரியும் தாய்மார் தமது குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதில் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.எனவே தான் இலங்கையிலும் தாய்ப்பால் வங்கி ஒன்றை அமைப்பது குறித்து சுகாதார கல்விப்பணியகத்தின் கவனம் திரும்பியுள்ளது.
இவ்வாறு தொழில்புரியும் தாய்மார் தமது குழந்தைகளுக்கு பால்மாவை வழங்குகின்றனர். இதனால் குழந்தையின் போஷாக்கிற்கு பங்கம் ஏற்படுகின்றது.குறைந்த பட்சம் ஆறு மாத காலத்திற்காவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே மேற்படி தாய்மாரின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கியூடாக தாய்ப்பாலை பெற்றுக்கொடுக்க முடியும்.
இதேவேளை, எடை குறைந்த குழந்தைகளுக்கு அவர்களின் போஷாக்கு நிலையை அதிகரித்துக்கொள்வதற்கு உத்தேச தாய்ப்பால் வங்கியானது வரப்பிரசாதமாகும்.
இந்நிலையில் குறைந்த செலவில் தாய்ப்பால் வங்கிகளை இலங்கையில் அமைக்க முடியுமெனவும் தேசிய போஷாக்கு தொடர்பான இணைப்பாளர் நம்பிக்கை தெரிவித்தார்.
Filed under: அனைத்து பதிவுகளும், அனைத்தும், இலங்கை, உழவன்۞, வீரவரலாறு |
மறுமொழியொன்றை இடுங்கள்