சந்தானத்துடன் போட்டி என்பதெல்லாம் இல்லை: வடிவேலு

கொலிவுட்டில் 1991ல் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் அறிமுகமான வடிவேலு, ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’யில் கதாநாயகனாகவும் நடித்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அரசியல் சாயம் பூசிக் கொண்டதால் சினிமாவில் தேக்கம் ஏற்பட்டது.

நீண்ட இடைவெளிக்கு பின்பு தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மீண்டும் நடிப்பது குறித்து வடிவேலு கூறுகையில், நான் சினிமாவை விட்டு விலகி விடவில்லை. இன்னும் இந்த துறையில்தான் இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வில் இருந்தேன். தற்போது புதிய உத்வேகத்தோடு மீண்டும் நடிக்க வந்துள்ளேன்.

புதுப்படங்களுக்கு ஒப்பந்தமாகி இருப்பது எனக்கு புத்துணர்ச்சி அளிப்பது போல் உள்ளது. என் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ‘ஆப்பிரிக்காவில் வடிவேலு’ என்ற காமெடி கதையுடன் என்னை அணுகினார். அப்படத்தில் முக்கிய கேரக்டரில் நான் நடிக்கிறேன்.

கதை ஆப்பிரிக்காவில் நடப்பதுபோல் இருக்கும். எனவே படப்பிடிப்புக்காக அங்கு செல்ல இருக்கிறோம். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும்.

‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. அதிலும் நான் நடிக்கிறேன்.

சந்தானத்துடன் போட்டி என்பதெல்லாம் இல்லை. சினிமா கடல் போன்றது. யாரும் இங்கு வரலாம். திறமையானவர்கள் நீண்ட காலம் நிலைக்க முடியும். எனக்கு நானே தான் போட்டி. வேறு யாரும் அல்ல.

பூபதிபாண்டியன் இயக்கும் ‘பட்டத்து யானை’ படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை.

அரசியல் நெருக்கடிகள் எதுவும் எனக்கு தற்போது இல்லை என்றும் சினிமாவில் மட்டுமே எனது முழு கவனத்தையும் செலுத்த போகிறேன் எனவும் கூறியுள்ளார்.

Advertisements

ஒரு பதில்

  1. எப்படியோ… மறுபடியும் வந்து நம்மை சிரிக்க வைக்கட்டும்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: