மனைவி கொலை வழக்கில் தீர்ப்பு சொல்லும் நேரத்தில் தப்பி ஓடிய கணவர்

திருச்சி மாவட்டம் சிறுகமணி அருகே காவல்காரன் பட்டியை சேர்ந்தவர் வெங்கட் ராஜ் (வயது 50). தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி(47). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த வெங்கட்ராஜ் ஜெயந்தியை கொலை செய்தார். இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதி நடந்தது.

இந்த கொலை தொடர்பாக பெட்ட வாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெயந்தியின் கணவர் வெங்கட்ராஜை கைது செய்தனர்.   பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட இருந்தது.

இதையொட்டி காலையில் நீதிபதி வேல்முருகன் முன்னி லையில் வெங்கட்ராஜ் ஆஜர் ஆனார். வழக்கின் தீர்ப்பு மாலையில் கூறப்படும் என்று நீதிபதி அறிவித்தார். மாலையில் மனைவி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்காக நீதிபதி வேல்முருகன் தயார் ஆனார்.   அப்போது குற்றவாளி வெங்கட்ராஜ் நீதிபதி முன்பு ஆஜர் ஆகவில்லை. இதனால் அவர் அழைக்கப்பட்டார். அப்போதும் அவர் வராததால் போலீசாரும் கோர்ட்டு ஊழியர்களும் அவரை தேடினார்கள். அப்போது வெங்கட்ராஜ் தப்பி ஓடியது தெரிய வந்தது.

இதையடுத்து வெங்கட்ராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி வேல்முருகன் பிடி வாரண்டு பிறப்பித்து உத்தர விட்டார். தீர்ப்பு சொல்லும் நேரத்தில் குற்றவாளி தப்பி ஓடிய சம்பவம் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: