முல்லைத்தீவில் பணத்தாசை காட்டி மக்களை வெடிபொருட்களிடம் சிக்கவைக்கும் படையினர்!

முல்லைத்தீவில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்வாதரத்தினைக் கொண்டு நடத்த முடியாமல் வாழும் மக்களுக்கு பணத்தாசை காட்டி ஆபாத்தான வெடிபொருட்களிடம் சிக்க வைக்கும் நோக்கில் படையினரும் காவல்துறையினரும் இணைந்து துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு உள்ளனர்.

மேற்படி துண்டுப்பிரசுரங்கள் முல்லைத்தீவில் உள்ள பல பாகங்களிலும் வினையோகிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் ஒன்று கூடும் பொது இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.

ஆபத்தான வெடிபொருட்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பது போல தயாரிக்கப்பட்டுள்ளள மேற்படி துண்டுப்பிரசுரம் மக்களை ஆபத்தான பாதைக்கு கூட்டிச் செல்லும் என்று அப்பகுதி பொது அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளது.
‘அபாயகரமான வெடிபொருட்களையும், ஆயுதங்களையும் வைத்திருப்பது ஆபத்தானது அப்பான மக்களே’ என்னும் தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ள மேற்படி துண்டுப்பிரசுரம் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பாக படையினருக்கோ அல்லது காவல்துறைக்கோ அறிவிக்கும் படியும், அவ்வாறு அறிவிப்பதன் மூலம் சுமார் ஆயிரத்தி 500 ரூபாவில் இருந்து 10 ஆயிரம் ரூபாவினை பணப்பரிசாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றிலும் மக்கள் இனங்காட்டும் வெடி பொருட்களினால் ஏற்படும் ஆபத்துக்கள் எவ்வளவு அதிகமானதோ, அதற்கேற்ப பரிசாக வழங்கப்படும் பணத்தின் தொகையும் அதிகரிக்கும் என்றும் குறித்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பல பகுதிகளில் இருந்த வெடிபொருட்கள் அகற்றப்படாமல் உள்ளது. இவ்வாறான ஆபத்தான பகுதிகளுக்கு மக்கள் பணப்பரிசினைப் பெற்றுக் கொள்வதற்காக பொது மக்கள் சென்று ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் தேடி வருகின்றனர்.

பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி படையினரும் காவல்துறையினரும் இவ்வாறு மக்களை ஆபத்தான வெடிபொருட்களிடம் சிக்க வைப்பது கண்டிக்கத்தக்க விடையம் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கண்ணிவெடிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரச சார்பற்ற அமைப்புக்களும், வடமாகான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரும் மேற்படி விடையத்தில் உள்ள ஆபத்தினை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதனால் ஏற்படும் ஆபத்தினையும் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: