தஞ்சை சின்னத்தம்பி நகரை சேர்ந்தவர் மகாதேவன் (55). விவசாயி. இவருக்கு சொந்தமான வீட்டில் பெரியசாமி என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இவர் அரிசிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
பெரியசாமியிடம் வீட்டை காலி செய்யும்படி உரிமையாளர் மகாதேவன் கூறி வந்தார். இதற்கு பெரியசாமி மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது. நேற்று இரவு 10. 30 மணியளவில் வீட்டை காலி செய்வது தொடர்பாக பெரியசாமிக்கும், வீட்டு உரிமையாளர் மகாதேவனுக்கும் மீண்டும் தகராறு உருவானது. இதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த மகாதேவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் (ஏர்கன்) பெரியசாமியை சுட்டார். இதில் அவரது இடது முழங்கையில் காயம் ஏற்பட்டது. அவர் வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஒடிவந்தனர். துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்த பெரியசாமியை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மகாதேவனை கைது செய்தனர்.
அவர் மீது 294 (பி) தகாத வார்த்தைகளால் திட்டுதல், 324 (கொடுங்காயம் ஏற்படுத்துதல்), 307 ( கொலை முயற்சி), 25(1) ஏ. அனுமதியின்றி ஆயுதத்தால் சுடுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரிசிக் கடை ஊழியரை துப்பாக்கியால் சுட்ட மகாதேவனுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் லலிதா.கடந்த ஒரு வருடத்திற்கு முன் கவிதா என்ற பெண்ணை 2 -வதாக திருமணம் செய்து கொண்டார்.
தஞ்சையில் அரிக்கடை ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Filed under: இணையதளம், உழவன்۞, தகவல், Uncategorized |
மறுமொழியொன்றை இடுங்கள்