நித்தி நீக்கப்பட்டது செட்டப்பா? டிஸ்மிஸ் தகவல் எங்கும் போய் சேரவில்லை!!

மதுரை ஆதீனம் அருணகிரிநாதரும், ‘முன்னாள்’ இளைய ஆதீனம் நித்தியானந்தாவும் ஒருவித ‘அன்டர்ஸ்டான்டிங்கில்’ உள்ளனர் எனவும், நித்தியானந்தா நீக்கப்பட்டதாக சொல்லப்படுவதே செட்டப் எனவும் பேச்சுக்கள் அடிபடும் நிலையில், நித்தி நீக்கப்பட்டது தொடர்பாக தமக்கு அதிகாரபூர்வ தகவல் ஏதும் வரவில்லை என்று கூறியுள்ளது தமிழக அரசு.

சென்னை உயர்நீதிமன்றத்தில், நித்தி இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டு தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

மதுரை ஆதீனம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால், “இளைய ஆதீனத்தில் இருந்து நித்யானந்தா நீக்கப்பட்டுள்ளார்” என்றுஞ தெரிவித்தபோது, “இந்த நீக்கம் குறித்து பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. அரசுக்கு தகவல் வந்துள்ளதா?” என்ற கேள்வி எழுந்தது.

இந்துசமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், “மதுரை ஆதீனத்தில் இருந்து நித்தியானந்தா நீக்கப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்துசமய அறநிலையத்துறைக்கும் அரசுக்கும் வந்து சேரவில்லை” என்று கூறினார். விசாரணை இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது.  :

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: