அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை தமிழர் தற்கொலை முயற்சி: நாடு கடத்தலுக்கு நீதிமன்றம் தடை

அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று நாடுகடத்தப்படவுள்ள இலங்கை தமிழர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரை நாடு கடத்தக்கூடாது என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இறுதிநேர சட்ட நடவடிக்கைகளும் தோல்வியில் முடிவடைந்தன.

இதனையடுத்து 42 வயதான குறித்த இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு நாடுகடத்தப்படவுள்ளார்.

இந்தநிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் அவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

தற்கொலை முயற்சியை அடுத்து ரோயல் மெல்போன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் மாரிபிநோங் தடுப்பு சிறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து அங்கு கூடிய 50க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், குறித்த இலங்கை அகதி நாடு கடத்தப்படக்கூடாது என்று கோசமிட்டனர்.

எனினும் இதனை அவுஸ்திரேலிய அதிகாரிகள் கருத்திற்கொள்ளவில்லை.

இதேவேளை தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தபோது குறித்த இலங்கை தமிழருக்கு பாரதூரமான காயங்கள் எவையும் ஏற்படவில்லை என்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

2ம் இணைப்பு

அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரி வரும் தமிழர்களுக்காக குரல் கொடுத்துவரும் கரன் மயில்வாகனம் இது தொடர்பாகத் தெரிவிக்கையில்,

இன்று அதிகாலை 5.15 மணியளவில் தனக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாகவும், முகாமில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தொலைபேசியில் அழைத்தவர் தன்னை உஷார் படுத்தியதாகவும் தெரிவித்தார்.

இந்தநிலையில் குறிப்பிட்ட நபரை நாடு கடத்த வேண்டாம் எனக் கோரி அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள Maribyrnong detention centre முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

கரன் மயில்வாகனமும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காணப்பட்டார்.

இருந்த போதிலும் நாடு கடத்துவது என்ற நிலைப்பாட்டில் அதிகாரிகள் உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலைக்கு முயற்சித்த அகதியின் நாடுகடத்தல் தீர்மானம் கைவிடப்பட்டது

அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று நாடுகடத்தப்படவிருந்த நிலையில் தற்கொலைக்கு முயற்சித்த இலங்கையருக்கு, இறுதி நேரத்தில் அவுஸ்திரேலியாவில் தங்கி இருக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

த ஒஸ்திரேலியா ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இன்று மாலை மெல்பேர்னில் இருந்து நாடுகடத்தப்படவிருந்த நிலையில், அவர் இன்று காலை இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

எனினும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் அவர் தமது நாடுகடத்தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன் படி, இலங்கையில் அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரை நாடுகடத்த கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: