இறுதிக்கட்ட போரின் போது முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் போதியளவு தம்மிடம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
இதுவரை காலமும் ஐக்கிய நாடுகள் தம்மிடம் ஆதாரங்கள் இருப்பதாக வெளிப்படையாக கூறவில்லை. எனினும் பிற அமைப்புக்களினதும் பொதுமக்களின் வாய்மொழி சாட்சியங்களையும் வைத்தே அறிக்கைகளை விடுத்ததுடன், தம்மால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு அறிக்கையினையும் ஆதாரம் காட்டியது.
ஆனால் தற்போது முதல் முறையாக தம்மிடம் காணொளிகள் உள்ளிட்ட ஆதாரங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த ஆதாரங்களை அடிப்படையாக அடுத்தாண்டு நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை மீது அழுத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என ஐ. நா. வட்டாரங்கள் கூறுகின்றன.
Filed under: ஈழம், Uncategorized |
ஆதாரங்களை வைத்துக் கொண்டு கொலைவெறியருடன் பேரம் பேசாது அவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதில் என்ன தயக்கம். ஏதாவது எதிர்பார்க்கின்றார்களா?