சிறையிலிருந்த கே.பி. விடுதலை

2009-ம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது, கே.பி. என்றழைக்கப்பட்ட குமரன் பத்மநாதன் என்ற விடுதலைப்புலிகளின் கடைசி தளபதியும் இலங்கை ராணுவத்திடம் பிடிபட்டார்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை இப்போது இலங்கை ராணுவம் விடுதலை செய்துள்ளது.  இதுதொடர்பாக இலங்கை ராணுவ தலைமை செய்தித் தொடர்பாளர் லக்‌ஷ்மன் ஹலுகல்லே’’விடுதலைப் புலிகளின் கடைசித் தலைவரான 58 வயதான கே.பி. என்கிற குமரன் பத்மநாதன் இனி சிறையில் இருக்கத் தேவையில்லை.   அவரின் தொண்டு நிறுவனப் பணிகளை தொடர்ந்து செய்வதற்காக விடுதலை செய்யப்படுகிறார்.   இந்த பகுதியில் சிறப்பாக மக்களுக்கு சேவைகள் செய் து வரும் அவரது நிறுவனம், மேலும் திறம்பட செயல்படுவதற்கு தேவையான அனைத்து உரிமைக ளையும் அவர் பெறுகிறார்.

முன்பு விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இருந்து எங்களுக்கு எதிராக செயல்பட்ட அவர், இப்பொழுது அந்தப் பகுதியின் வளர்ச்சிக்காக எங்களுடன் சேர்ந்து ஒரு பங்குதாரராக செயல்பட ஒத்திருப்பது எங்களுக்கு கிடைத்த ஒரு வெற்றியாக கருதுகிறோம்.

இந்தியா வேண்டுகோளுக்கு இணங்க, பன்னாட்டு போலிஸ் அமைப்பான ‘இண்டர்போல்’ பிடிவாரண்டில் இருக்கும் அவருக்கு இங்கு இப்போது எந்த தடையும் இல்லை. அவருக்கு எதிரான எந்த நீதிமன்ற வழக்கும் இங்கு கிடையாது’’என்று கூறியுள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: