அண்ணியை மிரட்டி உல்லாசம் அனுபவித்த வாலிபர்

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். அவரது மகள் கல்பனா (வயது24). கல்பனாவை அவரது மாமா முனிரத்தினத்தின் மகன் பழனி ஒருதலையாக காதலித்துள்ளார். ஆனால், கல்பனாவிற்கு இதில் சம்மதம் இல்லை என தெரிகிறது.இதற்கிடையில் பழனியின் அண்ணன் புண்ணியகோட்டிக்கு கல்பனாவை திருமணம் செய்து வைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து பழனி, தனது அண்ணியான கல்பனாவிடம் திருமணத்திற்கு முன்பு நாம் பழகியதாக கூறி உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டி கல்பனாவிடம் உல்லாசமாக இருந்துள்ளார். இவ்வாறு மிரட்டியே பலமுறை உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்.

 

இந்த நிலையில் கடந்த மே மாதம் கல்பனா 5 மாத கர்ப்பமாக இருந்தபோதும் பழனி இவ்வாறு மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அதை புண்ணியகோட்டி பார்த்து விட்டார். அதைத் தொடர்ந்து புண்ணியகோட்டி, தனது மனைவி கல்பனாவிடம் சரிவர பேசாமல் இருந்து வந்துள்ளார்.

 

அதனால் வேதனை அடைந்த கல்பனாவிடம், அண்ணன் உன்னை விவாகரத்து செய்தால் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என பழனி கூறியதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து கல்பனா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அவர் தற்போது நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் தனது கணவரின் தம்பி தன்னை மிரட்டி பாலியல் உறவு கொண்டது தொடர்பாக கல்பனா நேற்று ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: