விடுதலைப் புலிகளா? – குழப்பத்தில் கியூ பிரிவு பொலிசார்!

மர்மப்படகில் வந்த இலங்கை நபர் சுரேஷ் தன்னுடன் மேலும் இருவர் வந்ததாக கூறியதை தொடர்ந்து அவர்கள் விடுதலை புலிகள் அமைப்பினரா அல்லது கடத்தலில் ஈடுபடுபவர்களா என தெரியாமல் “கியூ’ பிரிவு போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை குறவன்தோப்பு கடற்கரை பகுதியில் கடந்த ஜூலை 23 ல் இலங்கையை சேர்ந்த பைபர் படகு நின்றது. இது குறித்து “கியூ’ பிரிவு போலீசார் விசாரித்து வந்தநிலையில், நேற்று முன்தினம் இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்த சுரேஷ், 28, என்பரை “கியூ’ பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்தார்.

தீவிர விசாரணை மேற்கொண்டதில் “இலங்கையில் உள்ள ஏஜன்ட் ஒருவர் 2 இலங்கையர்களை படகில் அழைத்து செல்லுமாறு கூறியதாகவும் மண்டபம் கடற்கரை பகுதியில் மேலும் 2 பேர் தயார்நிலையில் இருப்பார்கள் எனவும் கூறி அனுப்பினார். இங்கு வந்தபோது படகு பழுதானதால் 2 இன்ஜின்களையும் கழற்றி கடற்கரையில் பதுக்கி வைத்து விட்டோம். நாங்கள் எதிர்பார்த்த 2 பேர் இல்லாததால் என்னுடன் வந்த இருவரும் தனியாக சென்றுவிட்டனர். அவர்கள் எதற்காக வந்தனர் என்று தெரியாது என போலீசாரிடம் கூறியுள்ளார்.

சுரேஷ் கொடுத்த தகவலின்படி கடற்கரையில் முட்புதர்களிடையே மறைத்து வைத்திருந்த இரண்டு 25 எச்.பி. சுசுகி இன்ஜினை போலீசார் கைப்பற்றினர். மேலும் தப்பிய 2 இலங்கையர்கள் கடத்தல்காரர்களா அல்லது விடுதலை புலிகளா என தெரியாமல் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: