அரசு எச்சரிக்கை; மாணவ, மாணவிகளிடம் சில்மிஷம் செய்யும் ஆசிரியர்கள்

பள்ளி மாணவ, மாணவிகளிடம் தவறான முறையில் நடக்கும் ஆசிரியர்களின் கல்வித் தகுதி ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா வெளியிட்டுள்ள அரசாணையில், ’’முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய ஆசிரியர்களில் சிலர் மாணவ, மாணவிகளிடம் ஒழுக்க கேடான முறையில் நடந்து கொள்வதால், மாணவர் சமுதாயம், குறிப்பாக பெண் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே பள்ளி மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் தவறான முறையில் நடந்து கொள்வதை முற்றிலும் தவிர்ப்பதற்காக கீழ்க்கண்ட பரிந்துரையை கடைபிடிக்க வேண்டும்.

அதாவது தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களுக்கு தண்டனையாக கட்டாய ஓய்வு, பணிநீக்கம், டிஸ்மிஸ் போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.

சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்வி சான்றுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். மாணவ, மாண விகள் பிறரின் தவறான நடவடிக்கைகளிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் தவறான செயல்களில் ஈடுபடாவண்ணம் தகுந்த உளவியல் ஆலோசகர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.

மாணவர்களின் மனநிலை பாதிக்கும் பிரசினைகளை களைய உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கென பள்ளிக் கல்வித்துறை மூலம் உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்களை ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வும், ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: