மலை உச்சியில் இளம்பெண்ணுடன் போலீஸ்காரர் உல்லாசம்

களியக்காவிளை அருகே சுமார் 1000 அடி உயர மலை உள்ளது. இந்த மலை உச்சியில் திருவிதாங் கூர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் கட்டப்பட்ட பிரசித்து பெற்ற சிவன் கோயில் உள்ளது.

மலை உச்சியில் தொலை தொடர்புக்காக காவல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் ஒயர்லெஸ் கருவிகள் மற்றும் வாக்கி டாக்கி உள்ளிட்ட உபகரணங்களுக்கான கன்ட்ரோல் ரூம் அமைக்கப் பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. ஷிப்ட் முறையில் ஒரு போலீஸ் காரர் பணியில் இருப்பது வழக்கம்.

நேற்று மதியம் ஆயுத படை போலீஸ்காரர் ஒருவர் பணியில் இருந்துள்ளார். அப்போது சுமார் 30 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர், தன்னந்தனியாக மலை உச்சிக்கு சென்றார்.

இதை அப்பகுதியில் விளையாடி கொண்டு இருந்த சிறுவர்கள் பார்த்தனர். கோயிலில் திருட வந்த பெண்ணாக இருக்கலாம் என கருதிய அவர்கள், உடனடியாக ஊருக்குள் சென்று தகவல் தெரி வித்தனர்.

இதையடுத்து சிறிது நேரத்தில் ஊர் மக்கள் திரண்டு மலை உச்சிக்கு சென்றனர். அப்போது ஒயர் லெஸ் கன்ட்ரோல் ரூமில் பணியில் இருந்த போலீஸ்காரர் அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

போலீஸ்காரர் மற்றும் அப்பெண்ணை பிடித்து கீழே கொண்டு வந்தனர். அப்பெண்ணிடம் விசாரித்த போது தனது சொந்த ஊர் மார்த்தாண்டம் என்றும், அங்கன் வாடியில் பணிபுரிந்து வருவதாகவும், தனக்கு பெண் குழந்தை இருப்பதாகவும் தெரிவித்தார். இருவரையும் பொது மக்கள் பளுகல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: