கோர்ட்டுக்கு வந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

வேலூர் மாவட்டம் காட்பாடி கோபாலபுரத்தை சேர்ந்தவர் கவிதா(வயது26). இவரும் சென்னை அடையாறை சேர்ந்த கதிரவன்(32) என்பவரும் காதலித்து கடந்த 2010 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான பிறகு கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் கதிரவன் கவிதாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து திருமணமான 5 மாதத்தில் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கவிதா வரதட்சணை கொடுமை குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை வேலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராவதற்காக கவிதாவும் அவரது அக்காள் லதாவும் ஸ்கூட்டரில் (09/05/2012) கோர்ட்டுக்கு வந்தனர். இதேபோல் கதிரவனும் கோர்ட்டுக்கு வந்திருந்தார்.

கோர்ட்டில் ஆஜரான பிறகு கவிதாவும், லதாவும் ஸ்கூட்டரில் காட்பாடிக்கு செல்ல கோர்ட்டை விட்டு வெளியே வந்தனர். இதனை பார்த்து ஆத்திரமடைந்த கதிரவன் தான் வந்த காரில் கவிதாவின் ஸ்கூட்டரை விரட்டி சென்று வேகமாக மோதினார். இதில் ஸ்கூட்டரில் இருந்து கவிதாவும், லதாவும் கீழே விழுந்தனர்.

அப்போது காரில் இருந்து இறங்கிய கதிரவன் கவிதாவை தான் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் கை, கால் ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டினார். கவிதா கூச்சலிட்டார் அங்கு கூட்டம் கூடியதால் கதிரவன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

வீச்சரிவாளால் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த கவிதா வண்டியிலிருந்து கீழே விழுந்ததில் காயமடைந்த லதா ஆகியோர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து கதிரவனை தேடி வருகின்றனர்.தப்பியோடிய கதிரவனை பிடிக்க வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலும், சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: