• RSS தெரியாத செய்தியோடை

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS tharavu

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS kadukathi.com

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS சினிமா நியூஸ்

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • More than a Blog Aggregator
 • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

  Join 270 other followers

 • xxx

 • Advertisements

சிறிலங்கா: மேற்குலகிற்கு கற்றுக்கொடுத்துள்ள பாடங்கள்

ஆசியாவின் மிகப் பெரிய நாடுகளான சீனா மற்றும் இந்தியாவுடன் நெருக்கத்தைக் கொண்டுள்ள சிறிலங்காவுடன் இராஜதந்திர ரீதியான முலதனத்தைப் பயன்படுத்துவது பெறுமதியாக இருக்குமா என்பதை தீர்மானிக்க வேண்டிய நிலையில் அமெரிக்கா உள்ளது.

இவ்வாறு ரைம் சஞ்சிகையின் இணையத்தில் Jyoti Thottam எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுரையை ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி‘

‘கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு’ தனது இறுதி அறிக்கையை திங்கட்கிழமை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் கையளித்தது.

2002 இல் சிறிலங்காவில் நடைமுறைப்படுத்தப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை தோல்வியடைந்தமைக்கான காரணம் தொடக்கம், 26 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தம் 2009 மே மாதம் நிறைவுக்கு வந்தது வரை இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதே இந்த ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

தென்னாபிரிக்காவில் நிறவெறிக் கொள்கை முடிவுக்கு வந்த பின்னர் உருவாக்கப்பட்ட உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவைப் போன்றதொரு தோற்றத்தை, சிறிலங்காவில் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு கொண்டிருந்த போதிலும் இரு குழுக்களுக்கும் இடையில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன.

அதாவது கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் 1000 இற்கும் அதிகமானவர்கள் சாட்சியமளித்துள்ளனர்.

அத்துடன், சிறிலங்காவில் ஒரு தலைமுறையாகத் தொடர்ந்த உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் அந்த நாட்டு மக்களுக்கு உதவி புரியும் முகமாகவே இவ் ஆணைக்குழு உருவாக்கப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

உண்மையில், உண்மையான ‘கற்றுக் கொண்ட பாடங்கள்’ பல வித்தியாசங்களைக் கொண்டுள்ளது.

முதலாவதாக, பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் அரசியல் விட்டுக்கொடுப்புக்களே, முழுமையான இராணுவத் தீர்வின் மூலம் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்ததற்கான உண்மையான விலையாக இருக்க முடியும் என்பது சிறிலங்கா பெற்றுக் கொண்ட அனுபவத்தின் மூலம் வெளிப்படுகிறது.

புலிகளைப் போரில் வெற்றி கொண்டதன் மூலம் ராஜபக்ச அரசாங்கம் புகழின் உச்சத்தில் இருக்கின்ற போதும், அரசியல் இணக்கப்பாட்டிற்கான எந்தவொரு உண்மையான முயற்சிகளையும் மேற்கொள்வதற்கான ஊக்கத்தை அது குறைத்து விட்டுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் வெளிச்சமிட்டுக் காட்டப்படவில்லை.

இதற்குப் பதிலாக, இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்ற குறித்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்யுமாறு இவ் ஆணைக்குழு சிறிலங்கா அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.

ஆனால் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இதன் அறிக்கையில் குறிப்பிட்டுக் காட்டப்படவில்லை.

இவ் ஆணைக்குழு எந்தவொரு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோராவிட்டாலும் கூட, இவ்வாண்டின் ஆரம்பத்தில் பிரித்தானியாவின் சனல் -04 தொலைக்காட்சிச் சேவையானது அதிர்ச்சி தரக்கூடிய சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல் சம்பவங்களை காட்சிப்படுத்தியுள்ளது.

மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக வெளிப்படுத்தும் சிறிலங்கர்களுக்கு என்ன நடக்கும் என்பதை தற்போது ராஜபக்ச அரசாங்கம் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா இராணுவப் படைகளால் மேற்கொள்ளப்பட்டு வெற்றி கொள்ளப்பட்ட யுத்தத்திற்கு தலைமை தாங்கிய ஜெனரல் சரத் பொன்சேகா நவம்பர் 18, வெள்ளியன்று குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மூன்று பேர் கொண்ட நீதியாளர் குழு பொன்சேகாவை ‘பொய்யான வதந்தியைப் பரப்பிய’ குற்றச்சாட்டின் பேரில் மூன்று ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் சரணடைய முன்வந்த தமிழ்ப் புலித் தலைவர்களைக் கொல்லுமாறு, சிறிலங்கா அதிபரின் சகோதரனும் பாதுகாப்புச் செயலருமான கோத்தாபாய ராஜபக்ச கட்டளையிட்டதாக, பத்திரிகை ஒன்றிற்கான நேர்காணலில் பொன்சேகா தெரிவித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலேயே, இவருக்கு மூன்று ஆண்டுகால சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவம் ஒருபோதும் இடம்பெறவில்லை என ராஜபக்ச தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளார்.

இது தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படா விட்டாலும் கூட சிறிலங்காவில் உள்ள உள்ளுர் ஊடகங்கள் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை ஏற்றுக் கொண்டுள்ளன. இருந்தபோதிலும் இதுபற்றி முழுமையாக விசாரிக்கப்படவில்லை.

சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கான காரணங்கள் மற்றும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தாம் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் தொடர்பாக நோர்வே அரசாங்கம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தச்சம்பவம் தொடர்பாக அந்த அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

‘மே 17 இற்கும் 18 இற்கும் இடைப்பட்ட நள்ளிரவில் தாம் சரணடைய விரும்புவதற்கான இறுதிநேர விருப்பத்தை விடுதலைப் புலிகளின் அரசியற் தலைவர் நடேசன், புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் நோர்வேப் பிரதிநிதிகள், அமெரிக்க மற்றும் பிரிட்டன் தூதரகங்கள், அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம், கொழும்பிலிருந்த தமிழ் அரசியல்வாதியான சந்திரநேரு ஆகியோரைத் தொடர்பு கொண்டு தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக மிக விரைவாக சிறிலங்கா அதிபரின் ஆலோசகரும் சகோதரருமான பசில் ராஜபக்சவைத் தொடர்பு கொண்டு அவரிடமிருந்து பதில் கிடைக்கப் பெற்ற பின்னர், சரணடைய விரும்பும் தமிழ்ப் புலித் தலைவர்கள் முன்னணி போர் நிலைகளின் ஊடாக வெள்ளைக் கொடியை ஏந்தியவாறு வருமாறு அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இவர்கள் புறப்படுவதற்கு முன்னர் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல் மிகவும் குறுகியதாக இருந்தது. சில மணித்தியாலங்களின் பின்னர் இவர்கள் சுடப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது’

அதிகார சமநிலையானது தற்போது கிழக்கு நோக்கி உறுதியாக நகர்ந்திருப்பதால், சிறிலங்கா அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டையும் ஏனைய மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டையும் அசட்டை செய்ய முடியும்.

இதன் மூலம் ஏனைய உலக நாடுகள் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்திலிருந்து இரண்டாவது அனுபவத்தையும் கற்றுக்கொள்ள முடியும்.

நோர்வே அரசாங்கத்தின் அறிக்கை மிகவும் பெரியது. ஆனால் இதனை முழுமையாகப் பார்க்குமிடத்து இதன் முறையான சுய விமர்சனங்கள் மற்றும் அவதானிப்புக்கள் போன்றவற்றை அறியமுடிகின்றது.

‘சிறிலங்காவின் வரலாற்றில், சமரசப் பேச்சுக்கள் எழுச்சியடைவதும் பின் வீழ்ச்சியடைவதும் மேற்குலக சக்திகளினதும், நாட்டின் இறையாண்மையைப் பிரகடனப்படுத்துவதற்குமான ஒரு பகுதியாக அமைந்துள்ளது’.

கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார, அரசியல், இராணுவ ஆதரவென்பது சிறிலங்காவிற்கு மிகவும் அவசியமற்றதாகவே காணப்படுகின்றது.

இந்த அறிக்கையின் படி, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் இராணுவ உதவிகளையே சிறிலங்கா அரசாங்கம் நம்பியிருந்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா ஆகியன சிறிலங்காவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளிகளாக இருக்கலாம். ஆனால் சிறிலங்காவின் அபிவிருத்தியில் சீனா பல பில்லியன் டொலர்களை மிக விரைவாக முதலீடு செய்துள்ளது.

யுத்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நாவில் விவாதித்த போது சிறிலங்காவிற்கு ஆதரவாக சீனா மற்றும் ரஸ்யா ஆகியன எப்போதும் துணையிருப்பதால் அமெரிக்கா, ஐரோப்பா போன்றவற்றிலிருந்து ஏற்படும் இராஜதந்திர ரீதியான அழுத்தங்களை சிறிலங்கா அசட்டை செய்ய முடியும்.

இந்தியாவும் இரு பக்கமும் இராஜதந்திர ரீதியான நகர்வை மேற்கொண்டுள்ளது.

‘யுத்தத்தின் இறுதி மாதங்களில் முக்கிய ராடர்களையும் புலனாய்வுத் தகவல்களயும் சிறிலங்காப் படைகளுக்கு இந்தியா வழங்கியுள்ளது.

தமிழ் மக்களிற்கு எதிராக இந்திய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன என அரசியல் அழுத்தங்கள் ஏற்படாதிருப்பதற்காக, இந்திய மத்திய அரசு தான் ஆயுத உதவிகளை வழங்கவில்லை என்றே எப்போதும் தெரிவித்துள்ளது.

அத்துடன் போருக்குத் தேவையான ஆயுதங்களை சிறிலங்கா வேறெங்கும் கொள்வனவு செய்வதை இந்தியா தடுக்கவில்லை.

யுத்தத்தின் இறுதிப்பகுதியில் புலிகளைப் பாதுகாப்பதில் இந்தியா ஏதாவது ஆர்வம் கொண்டிருந்ததா என்பதும் சந்தேகத்திற்குரிய விடயமாகும்.

இது விடயத்தில் மேற்குல நாடுகளின் அழுத்தத்தை புறக்கணிக்குமாறு மேற்குலகைச் சாராத நாடுகள் சிறிலங்காவிடம் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா இராஜதந்திரி ஒருவரது வாக்குமூலத் தகவலாகும்’ என நோர்வே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவுக்கு வந்ததிலிருந்து சிறிலங்காவின் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கவனத்திற் கொண்டு அரசியல் தீர்வு நோக்கி நகருமாறு இந்திய மத்திய அரசு, சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தம் கொடுத்து வந்துள்ளது.

புலிகளைத் தோற்கடிப்பதில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு உதவிய இந்தியா, சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த மீறல்கள் தொடர்பாக ஆராயப்படும் போது ராஜபக்ச அரசுக்கான ஆதரவைக் கைவிடும் போலத் தென்படவில்லை.

சிறிலங்கா விடயத்தில் அமெரிக்காவும் பங்களிக்க வேண்டியிருந்துள்ளது.

அதாவது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக் சிறிலங்காவுக்கு யுத்த மீறல்கள் தொடர்பாக அழுத்தம் கொடுப்பதுடன், தமிழ் அரசியற் கட்சிகளுடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்றார்.

2006 தொடக்கம் மே 2009 வரை சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதராகக் கடமையாற்றிய பிளேக், அண்மையில் பல தடவைகள் சிறிலங்காவிற்கு வருகை தந்து சிறிலங்கா மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நம்பகத்தன்மையான அறிக்கையைத் தயாரிக்குமாறு கடந்த செப்ரெம்பரில் பிளேக் கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவைக் கோரியிருந்தார்.

‘இது நம்பகத் தன்மையற்றிருந்தால், இது தொடர்பாக மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிவரும்’ என பிளேக் தெரிவித்திருந்தார். அதாவது சுயாதீனமான அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படும் என்பதே இதன் கருத்தாகும்.

நல்லிணக்க ஆணைக்குழு தற்போது தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில், ஆசியாவின் மிகப் பெரிய நாடுகளான சீனா மற்றும் இந்தியாவுடன் ரீதியாக நெருக்கத்தைக் கொண்டுள்ள சிறிலங்காவுடன் இராஜதந்திர ரீதியான முலதனத்தைப் பயன்படுத்துவது பெறுமதியாக இருக்குமா அல்லது இல்லையா என்பதை அமெரிக்கா தீர்மானிக்க வேண்டியுள்ளது.

என்ன நடந்தாலும், சிறிலங்கா மூன்றாவது பாடத்தையும் கற்றுக் கொடுத்துள்ளது:

அதாவது மேற்குலக கோட்பாட்டை முற்றுமுழுதாகப் பிரயோகிக்கும் போது ‘மனித உரிமைகள்’ என்ற பதம் அதன் தார்மீக சக்தியை இழந்து விடுகின்றது என்பதைத் தற்போது சிறிலங்காவில் இடம்பெற்ற சம்பவங்களிலிருந்து கற்றுக்கொள்ள முடிகின்றது.

சிறிலங்காவைத் தவிர இவ்வாறான இரட்டைப் பண்புகளைக் கொண்ட வேறு எந்த நாடுகளும் கிடையாது. மேற்குலக அரசாங்கங்கள் அல்லது மேற்குலக ஊடகங்களால் விமர்சிக்கப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், அந்த விமர்சனங்களை ராஜபக்ச தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்கிறார்.

மேற்குலத்தால் தலைமை தாங்கப்படும் இராஜதந்திர அழுத்தங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் என்பன பர்மா போன்ற நாடுகளில் மட்டுமே வெற்றியளிக்க முடியும்.

ஆனால் இவ்வாறான உத்திகள், புதிய ஆசிய நூற்றாண்டில் நீண்டகால வெற்றியைத் தராது. என்ன நடக்கப் போகிறது? சிறிலங்கா மேற்குலகத்திற்கு மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திற்குமே இதற்கான பதிலைக் கண்டறியும் வாய்ப்பொன்றை சிறிலங்கா தற்போது வழங்கியுள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: