மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு மருத்துவர் தான் காரணம்

உலகப் புகழ்பெற்ற பிரபல பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 25ந் திகதி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது மரணம் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மைக்கேல் ஜாக்சன் பல தடவை முகமாற்று பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து இருந்தார். அதனால் ஏற்பட்ட வலிக்காக புரோபோபோல் என்ற சக்தி வாய்ந்த மயக்க மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

பொதுவாக இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த மாத்திரையை மிக குறைந்த அளவில் பயன்படுத்துவர். ஆனால் மைக்கேல் ஜாக்சனுக்கு அவர் மரணம் அடைந்த அன்று குடும்ப டாக்டர் முர்ரே அளவுக்கு அதிகமாக புரோபோபோல் மாத்திரை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது லாஸ்ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் வழக்கு தொட ரப்பட்டது.

அதில் மைக்கேல் ஜாக்சன் தூங்குவதற்கு டாக்டர் முர்ரே அளவுக்கு அதிகமான புரோபோபோல் மாத்திரை கொடுத்ததால்தான் அவர் இறந்தார். எனவே டாக்டர் முர்ரே கொலை குற்றவாளி என புகார் தெரிவிக்கப்பட்டது. இதை முர்ரே மறுத்து வந்தார்.

இந்த நிலையில் வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டு 6 வாரங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. 49 பேர் சாட்சியம் அளித்தனர். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் டாக்டர் முர்ரேதான் கொலை குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. அளவுக்கு அதிகமாக அவர் கொடுத்த மாத்திரைதான் மைக்கேல் ஜாக்சனின் உயிரை பறித்தது என நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்த குற்றத்துக்கான தண்டனை விவரத்தை வருகிற 29ந் திகதி அறிவிப்பதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து டாக்டர் முர்ரேயின் கையில் விலங்கு பூட்டப்பட்டு அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் முர்ரேவுக்கு குறைந்தது 4 வருட ஜெயில் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் மருத்துவம் செய்வதற்கும் தடை விதிக்கப்படும் என்றும் தெரிகிறது.

நேற்று நடந்த கோர்ட்டு விசாரணையை மைக்கேல் ஜாக்சனின் தாயார் காத்ரின், தங்கை ரெப்பி ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை கேட்டதும் மவுனமாக கண்ணீர் விட்டு அழுதனர்.

மேலும் கோர்ட்டுக்கு வெளியே கூடியிருந்த மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்கள் தீர்ப்பை கேட்டதும் பொங்கிவந்த அழுகைக்கு இடையே மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதற்கிடையே தீர்ப்பு குறித்து மைக்கேல் ஜாக்சனின் தம்பி ஜெர்மெயின் கருத்து தெரிவித்துள்ளார். நீதி காப்பாற்றப்பட்டுள்ளது. மைக்கேல் ஜாக்சன் எங்களுடன்தான் இருக்கிறார் என்றார்.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s