தொழில்நுட்பத்துறையில் உலகின் அதி சக்திவாய்ந்த நபர்?

உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலை போர்ப்ஸ் சஞ்சிகை அண்மையில் வெளியிட்டது.

இப்பட்டியலில் முதல் 10 பேரில் தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான்கள் இருவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

அதில் ஒருவர் பில்கேட்ஸ் மற்றையவர் ஷூக்கர் பேர்க்.

இவர்கள் இருவரும் யார் என்பது தொடர்பில் மேலதிக விளக்கம் தேவையில்லை .காரணம் தங்களது துறையில் இருவரும் சாதனையாளர்களே.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்பட்டியலில் பில்கேட்ஸ் 4 ஆவது இடத்தினையும், ஷூக்கர் பேர்க் 9 ஆவது இடத்தினையும் பெற்றிருந்தனர்.பத்து இடங்களுக்குள் வந்துள்ள ஏனையோர் மற்றைய துறைகளைச் சார்ந்தவர்களேயாவர்.

இதன்படி பில்கேட்ஸ் தொழில்நுட்ப உலகில் அதி சக்தி வாய்ந்த நபராகத் தன்னை நிரூபித்துள்ளார்.

அவர் இப்பட்டியலில் 4 ஆம் இடத்தினைப் பெற்றிருப்பதற்கு இன்னொரு காரணமும் பரவலாகக் கூறப்படுகின்றது .அதாவது பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மிலின்டா கேட்ஸ் இணைந்து செயற்படுத்தும் பில் & மிலின்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகும்.

உலகின் மிகப் பெரிய அறக்கட்டளையாக கருதப்படும் இது பல்வேறு நலத்திட்டப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது. முக்கியமாக மருத்துவம், ஏழ்மை ஒழிப்பு, கல்வி ஆகிய துறைகளில் இது அதிக அக்கறைகொண்டுள்ளது.

இப்பட்டியலில் 9 ஆவது இடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருப்பவர் ஷூக்கர் பேர்க்.இவர் பேஸ்புக்கின் ஸ்தாபகர். இப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள வயது குறைந்த நபராக இவர் கருதப்படுகின்றார்.

மேலும் இப்பட்டியலில் கூகுள் லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோர் 30 ஆவது இடத்தில் உள்ளனர்.

இப்பட்டியலில் அமேசன் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜெப் பீசொஸ் 40 ஆவது இடத்திலும், அப்பிள் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிம் குக் 58 ஆவது இடத்திலு ம் உள்ளனர்.

கடந்த வருடம் போர்ப்ஸ் தரவரிசையில் அப்பிளின் ஸ்டீவ் ஜொப்ஸ் 17 ஆவது இடத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: