புதையலாக கிடைத்த தங்க நாணயங்கள்

ஆந்திராவில் புதையலாக கிடைத்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயங்களை கிராமத்தினர் பங்கு பிரித்துக் கொண்டனர்.
தகவல் அறிந்த வருவாய் துறையினர் மீட்டு அவற்றை அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் கலுகொட்லா கிராமத்தில் பாஸ்கர் என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் களை எடுக்க மகேஸ்வரி என்பவர் நிலத்தை தோண்டினார்.

அப்போது நிலத்தில் செம்புகுடம் ஒன்று சிக்கியது. அந்த குடத்தில் தங்க நாணயங்கள் இருந்தன. நிலத்தின் சொந்தக்காரர் பாஸ்கருக்கு இத்தகவலை தெரிவித்தனர். அவர் கூலி வேலைக்கு வந்த 10 பெண்களுக்கும் தலா ஒரு தங்க நாணயத்தை வழங்கினார்.

விவசாயி பாஸ்கருக்கு தங்க புதையல் கிடைத்த செய்தி அந்த கிராமத்தில் உள்ள பெரியவர்களுக்கு தெரிந்ததும், அவர்களுக்கு 20 தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.

135 நாணயங்கள்: செம்பு குடத்தில் மொத்தம் 135 நாணயங்கள் இருந்தன. இந்த தகவலை மறைக்க 47 தங்க நாணயங்களை மற்றவர்களுக்கு அளித்த பின் மீதமிருந்த 88 நாணயங்களை வைத்துக்கொண்டார்.

இத்தகவல் அறிந்ததும் வருவாய்த் துறையினர் பொலிசாருடன் சென்று விவசாயி பாஸ்கரிடம் 88 தங்க நாணயங்களை பறிமுதல் செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கிராம மக்களுக்கு அளிக்கப்பட்ட தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நாணயங்களில் ஒரு பக்கம் விஷ்ணு, சிவன், விக்னேஸ்வரர், காளி தேவியின் உருவங்களும், மற்றொரு பக்கம் தேவ நாகரி எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த நாணயங்கள் விஜயநகர மன்னர் காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் தற்போதைய மதிப்பு ஒரு கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. வருவாய் துறை அதிகாரிகள் இந்த நாணயங்களை மெகபூப் நகர் கலெக்டர் புருஷோத்தம ரெட்டியிடம் ஒப்படைத்தனர்.

இதில் சில நாணயங்களை தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகளின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார். மீதி நாணயங்கள் மாவட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: