கடாபியை உயிருடன் பிடித்து வராமல், கொன்றவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்; லிபிய அரசு

லிபியாவில் சர்வாதிகாரி கடாபியை கொன்றவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என்று புதிய ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர்.லிபியாவில் 42 ஆண்டாக சர்வாதிகார ஆட்சி ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த அதிபர் கடாபியை புரட்சிப் படையினர் சுட்டுக் கொன்றனர்.இதுகுறித்து முழு அறிக்கையை சமர்ப்பிக்கும்படி லிபிய மாற்று அரசு கவுன்சிலை ஐ.நா கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் உயிருடன் பிடிபட்ட கடாபியை கொன்றது ஏன் என்று சர்வதேச நாடுகள் கேள்வி எழுப்பி உள்ளது. இந்நிலையில் கடாபியை கொன்றவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய அரசு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.இதுகுறித்து மாற்று கவுன்சில் அதிகாரிகள் கூறுகையில், கடாபியை உயிருடன் பிடித்து வராமல் கொன்றவர்கள் மீது லிபிய அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மற்றவர்கள் சொல்லும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம்.

கடாபி கொலை பற்றி ஏற்கனவே விசாரணையை தொடங்கி விட்டோம். போர் குற்றவாளிகளை எப்படி நடத்துவது என்பதற்கான நடத்தை விதிமுறைகளை நாங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளோம். எனினும் கடாபியை கொன்றது தனிப்பட்ட செயல். இதில் புரட்சிப் படையினருக்கோ அல்லது லிபிய தேசிய ராணுவத்துக்கோ தொடர்பில்லை என்றனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: