விபச்சாரத்தில் ஈடுபட்ட காரணங்களால் 2,235 மாணவர்களின் விசா ரத்து

இந்தியா்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்கள் 15,000 நபர்களின் விசாவை அவுஸ்திரேலியா அரசு ரத்து செய்துள்ளது.
இந்தியாவிலிருந்தும், மற்ற ஏனைய நாடுகளிலிருந்தும் அவுஸ்திரேலியாவிற்கு மாணவர்கள் படிக்கச் செல்வார்கள். ஆனால் கடந்த ஓராண்டில் அவுஸ்திரேலிய அரசு 15,066 வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ரத்து செய்துள்ளது.

இதனால் ஆயிரக் கணக்கான இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் தோல்வியடைந்தது அல்லது வகுப்பை புறக்கணித்த காரணத்தால் 3,624 மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும் கல்விக்கான விசாவில் வந்து சட்டவிரோதமாக வேலை செய்தவர்கள் அல்லது விபச்சாரத்தில் ஈடுபட்ட காரணங்களால் 2,235 மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டது. இதுதவிர பல்வேறு காரணங்களுக்காக கடந்த ஓராண்டில் மொத்தம் 15,066 விசா ரத்து செய்யப்பட்டது. முந்தைய ஆண்டை விட இது 37 சதவீதம் அதிகம் ஆகும்.

மொத்த வெளிநாட்டு மாணவர்களில் 6ல் ஒருவர் அதாவது 17 சதவீதம் பேர் இந்தியர்கள். தொழிற்பயிற்சி, பல்கலைக்கழக கல்வி, ஆங்கில கல்வி அல்லது பள்ளிக் கல்வி உட்பட மொத்தம் 8 பிரிவுகளின் கீழ் மாணவர்களுக்கு விசா வழங்கப்படுகிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: