• RSS தெரியாத செய்தியோடை

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS tharavu

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS kadukathi.com

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS சினிமா நியூஸ்

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • More than a Blog Aggregator
 • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

  Join 270 other followers

 • xxx

 • Advertisements

இந்தியாவின் தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் சீனா

இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கத்தை முன்னர் தலைமை தாங்கிய மறைந்த பி.வி.நரசிம்ம
ராவ் 1995 ல் அணுவாயுத சோதனையை மேற்கொள்வதற்கான அனைத்து முன் ஆயத்தங்களையும்
செய்திருந்தார்.

இதனடிப்படையில் இவரைத் தொடர்ந்து இந்திய ஆட்சியைக்
கைப்பற்றிக் கொண்ட BJP தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியானது National Democratic
Alliance – NDA அணுவாயுத சோதனைக்கான செயற்பாடுகளை மேலும் முன்னகர்த்த
வேண்டியிருந்தது.

தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்
போது அணுவாயுத பரிசோதனையை மேற்கொள்ள இந்திய தேசமானது தயாராக இருந்ததாகவும், இதற்கான
ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்கள், அணுக்குண்டு போன்றன தயார் நிலையில்
வைக்கப்பட்டிருந்ததாகவும், கடந்த வியாழனன்று இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு
ஆலோசகர் பிரஜீஸ் மிஸ்ரா [former National Security Advisor – NSA, Brajesh Mishra]
தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் அமெரிக்கா இந்தியாவின் அணுவாயுதப்
பரிசோதனைத் திட்டத்தை அறிந்து கொண்டமையால் பின்னர் இது பிற்போடப்பட்டதாகவும் அவர்
மேலும் தெரிவித்தார்.

“நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது அணுவாயுதப் பரிசோதனையை
மேற்கொள்ளத் தயார் என எம்மிடம் தெரிவித்திருந்த விஞ்ஞானிகளிடமிருந்து நாங்கள்
தகவல்களைப் பெற்றுக் கொண்டிருந்தோம். நாம் எவ்வளவு விரைவாக அப்பரிசோதனையைச் செய்ய
முடியுமோ அவ்வளவு விரைவாக அதனைச் செய்ய விரும்பினோம். ஆனால் அப்போது இந்திய
குடியரசு அதிபராக இருந்த கே.ஆர். நாராயணன் அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளுக்கு
சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் மீளவும் இந்தியாவிற்கு மே 10 அன்று
திரும்பியிருந்தார். ஆனால் மே 11 அன்று அணுவாயுதப் பரிசோதனையை மேற்கொள்வதெனத்
தீர்மானிக்கப்பட்டிருந்தது” என ஆசியாவில் உள்ள கடற்படையை நவீனமயப்படுத்துதல்
தொடர்பாக அவதானிப்பு ஆராய்ச்சி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட கருத்தரங்கில்
உரையாற்றும் போதே பிரஜீஸ் மிஸ்ரா இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்திய தேசமானது
சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளினதும் கூட்டு இராணுவத்தை எதிர்நோக்கக்
கூடியதாக தயார் செய்யப்பட்டிருக்கவில்லை என தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள
அச்சுறுத்தல் நிலை தொடர்பாக விளக்கமளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அயல் தேசங்களின் இராணுவப் பலம், புலனாய்வு விடயங்கள் மற்றும் அமைதிநிலை
தொடர்பாக அடையாளங் கண்டுகொள்வதானது தேசிய பாதுகாப்பிற்கு மிகப் பிரதான
விடயங்களாகும் எனவும், ஆனால் துரதிஸ்டவசமாக இந்தியாவைப் பொறுத்தளவில் இது விரோதப்
போக்கைக் கொண்ட அயல்நாடுகளிற்கிடையில் அகப்பட்டுள்ளதாகவும் இந்தியாவின் முன்னாள்
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜீஸ் மிஸ்ரா தனது கருத்துரையில் தெரிவித்துள்ளார்.

“இன்றைய சூழ்நிலையில் சீனாவானது பாகிஸ்தானிற்கு ஆதரவு வழங்கிவருகின்றது.
நான் இவ்விரு நாடுகளும் எதிரிகள் எனக் கருதுகிறேன். ஆனால் எமது நட்பு நாடுகளில்
ஒன்றான அமெரிக்காவும் இதேபோன்று பாகிஸ்தானிற்கு உதவி புரிகின்றது. எமக்கு எதிராக
அதாவது இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்தக் கூடிய 20 பில்லியன் டொலர்கள்
பெறுமதியான F-16 கள் பலவற்றை பாகிஸ்தானிற்கு அமெரிக்கா வழங்கியுள்ளது” என பிரஜீஸ்
மிஸ்ரா தனது கருத்துரையில் மேலும் சுட்டிக்காட்டினார்.

சீனாவானது
பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கஸ்மீர் பிரதேசத்திற்கு மட்டும் தனது உதவிகளை
வழங்கவில்லை, அத்துடன் சிறிலங்கா, மாலைதீவு, நேபாளம் போன்ற இந்தியாவின்
அயல்நாடுகளுக்குப் பல்வேறு விதமான உதவிகளை வழங்கி வருவதாகவும் மிஸ்ரா
சுட்டிக்காட்டினார்.

இந்தியாவை அதன் பிராந்தியத்தில் முக்கியமற்ற ஒரு
சக்தியாக மாற்றுவதே சீனாவின் திட்டமாகும். கடந்த இரண்டு தொடக்கம் மூன்று ஆண்டுகளாக
சீன இராணுவமானது வலும்மிக்க அதிகாரம் மிக்க இராணுவப் படையாகத் தோற்றம் பெற்றுள்ளது
எனவும் மிஸ்ரா தனது கருத்துரையில் குறிப்பிட்டார்.

சீனாவின் அதிகாரத்தைக்
கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா, யப்பான், அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகியன
இணைந்து முயற்சியில் ஈடுபடும் அதேவேளை, அமெரிக்கர்களின் அதிகார வலுவை ஆசியா மற்றும்
ஐரோப்பாக் கண்டங்களிலிருந்து நிறைவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் சீனா
இறங்கியுள்ளதாகவும் இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ சீனாவுடன் மோதலில் ஈடுபட வேண்டிய
தேவையில்லை. சீனாவின் அதிகரித்து வரும் ஆதிக்கத்தை சமாளிக்க நாம் எல்லோரும் இணைந்து
செயலாற்ற வேண்டியுள்ளது. இரு நாடுகளில் ஒன்று கிழக்காசிய அமைப்புக்களைப்
பயன்படுத்தி இது தொடர்பாக பல்வேறு வகையான கலந்துரையாடல்களை சீனாவுடன் மேற்கொள்ள
முடியும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக தற்போது நிலவும்
சூழலானது இந்தியாவிற்கு பெரும் ஆபத்தை விளைவிப்பதாக உள்ளதாகவும், எல்லா
அரசாங்கங்களும் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நல்லதோர் உறவைக் கட்டியெழுப்ப முயற்சி
செய்ய வேண்டியிருப்பதாகவும் மிஸ்ரா தெரிவித்தார்.

மூலோபாய உறவைப்
பாதிக்கும் எல்லைப் பிரச்சினை தொடர்பாகப் பேசுவதற்காக அடல் பிகாரி வாஜ்பாய் ஒரு
சிறப்பு பிரதிநிதிகளைக் கொண்ட பொறிமுறை ஒன்றை உருவாக்கியிருந்ததாக மிஸ்ரா
குறிப்பிட்டார். ஆனால் எல்லைப் புறப் பிரச்சினை தொடர்பாக தீர்வெடுப்பதில் சீனா
விருப்பம் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“அவர்கள்
Tawang எல்லைப் பிரச்சினை தொடர்பாகவும், கிழக்குப் புறத்தே நிலவிய எல்லைப்
பிரச்சினை தொடர்பாகவும் தீர்வெடுக்கவே விரும்பினார்கள். மேற்குப் புற எல்லைப்
பிரச்சினை தொடர்பாகக் கலந்துரையாட அவர்கள் விரும்பவில்லை” எனவும் மிஸ்ரா
சுட்டிக்காட்டினார்.

“நாங்கள் தற்போது மிகவும் ஆபத்தான சூழலில் உள்ளோம்.
அடுத்த சில ஆண்டுகளில் 1963ல் நாங்கள் சந்தித்த பிரச்சினைகளை விட அதிகமான
பிரச்சினைகளை நாங்கள் சந்திப்போம்” என அவர் தீர்க்கதரிசனமாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவமானது 155mm துப்பாக்கிகள் தேவை என வலியுறுத்தி வருகின்றது.
ஆனால் 1999ல் இடம்பெற்ற கார்கில் போரின் போது நாட்டைப் பாதுகாத்த Bofors
பீரங்கிகளைப் பயன்படுத்த இந்திய அரசாங்கம் விரும்பவில்லை எனவும்
பல்பயன்பாட்டிற்குகந்த 126 யுத்த வான்கலங்களை வாங்குவதற்கான தீர்மானம் எடுப்பதிலும்
இந்திய அரசாங்கமானது தாமதம் கொண்டுள்ளது எனவும் மிஸ்ரா கருத்துத் தெரிவித்தார்.

பாதுகாப்புப் படைகளிற்கான பொறுப்பதிகாரியை நியமித்து இந்தியாவின்
பாதுகாப்பு மீள்கட்டமைப்பை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் அருண்சிங் ஆணைக்குழு
முக்கிய சில பரிந்துரைகளை மேற்கொண்டிருந்த போதிலும், “இவற்றை வாஜ்பாய் அரசாங்கம்
மற்றும் தற்போதைய UPA அரசாங்கங்கள் என்பன நடைமுறைப்படுத்த விரும்பவில்லை என்பது
எனக்குத் தெரியாது. இராணுவ ஆதிக்கம் மேலோங்கி விடும் என்ற அச்சத்தில் இவ்வாறு
செய்யாதிருக்கலாம். இந்தியர்களின் சூழ்நிலையில் இவ்வாறான அச்சங்கள் ஆதாரமற்றவை
ஆகும்” என மிஸ்ரா மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி வழிமூலம்: Iftikhar
Gilani is Special Correspondent with Tehelka.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: