ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால் அடிக்க அடிக்கத் தான் மேலே எழும்

சென்னையில் அண்ணா அறிவாலயத்துக்கு முறைகேடாக இடம் வாங்கியதாக தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஜெயலலிதாவிற்கு, இதை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாரா என சவால் விட்டார் தி.மு.க தலைவர் கருணாநிதி.
திருச்சியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தி.மு.க தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசியது: இந்த ஆட்சியில் நடைபெறும் தேர்தல், இடைத்தேர்தல் ஆனாலும், உள்ளாட்சித் தேர்தல் ஆனாலும் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு சர்வாதிகார அடிப்படையில் நடத்தப்படும் தேர்தல்.

தி.மு.க தலைவர்களை, முன்னணி நிர்வாகிகளை சிறையில் தள்ளி 45 வழக்குகளைத் தொடர்ந்தால் தொண்டர்கள் ஓடிவிடுவார்கள், தொண்டர்கள் இருக்கமாட்டார்கள், தேர்தல் பணி ஆற்ற மாட்டார்கள் என்று கருதி தேர்தல் நடத்துகிறார்கள்.

ஆனால், அடிக்க அடிக்கத் தான் பந்து மேலே எழும் என்ற அடிப்படையில் தி.மு.க இளைஞர்கள், வீரர்கள் இதற்கெல்லாம் பயந்தவர்கள் இல்லை என்பதன் எடுத்துக்காட்டுதான் இந்த மாபெரும் பொதுக் கூட்டம். யாராலும் தி.மு.கவை வீழ்த்த முடியாது. அதன் அடையாளம்தான் இந்தக் கூட்டம்.

தேர்தல் தோல்வியைப் பற்றி கவலைப்படுபவனல்ல நான். வெற்றி கிடைத்தால் வெறி கொண்டு ஆடாமல், தோல்வியடைந்தால் துவண்டு விடாமல் இருக்கும் இயக்கம் நடத்துபவன் தான் உண்மையான வீரன்.

திருச்சியில் வெட்டவெளியில் அல்ல, மக்கள் கூடியிருந்த திரளில் முதல்வர் ஜெயலலிதா பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். சென்னையில் அண்ணா அறிவாலயத்துக்கு இடம் வாங்கிய போது, யாரோ ஜமீன்தாரிடம் மிரட்டி வாங்கிவிட்டதாகக் கூறியிருக்கிறார்.

1972-ல் தி.மு.க அறக்கட்டளைக்காக இடம் வாங்கியபோது அதில் தலைவராக நான் (மு. கருணாநிதி), உறுப்பினராக நெடுஞ்செழியன், பொருளாளர் என்கிற முறையில் ஓர் உறுப்பினராக எம்.ஜி.ஆர் ஆகியோர் கையெழுத்திட்டிருக்கிறோம்.

அந்தச் சொத்துக்கு சொந்தமான 10 பேரும் கையெழுத்திட்டிருக்கிறார்கள். முதல் தவணையாக ரூ 5 லட்சம், பிறகு ரூ 4 லட்சம் என மொத்தம் ரூ 9 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது. 25 கிரவுண்டு நிலம் வாங்கப்பட்டது. பிறகுதான் எம்.ஜி.ஆர், தி.மு.க விலிருந்து விலகினார். இப்போது அந்த அறக்கட்டளையில் பேராசிரியர் அன்பழகன், மு.க. ஸ்டாலின் வரை உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

தனது பேச்சுக்கு சர்காரியா கமிஷனையும் துணைக்கு இழுத்திருக்கிறார் ஜெயலலிதா.சர்க்காரியா கமிஷனிடம் புகார் அளித்தவர்களில் ஒருவரான எம்.ஜி.ஆ.ரே, பின்னர், எனக்கும் (கருணாநிதிக்கும்) இதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியிருக்கிறார். இப்போது ஜெயலலிதாவுக்கு அறைகூவல் விடுக்கிறேன்.

தி.மு.க வினரை பொய் வழக்கு போட்டு நீதிமன்றத்துக்கு இழுக்கும் ஜெயலலிதா, இந்தச் சவாலை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாரா? இதற்கான தண்டனையை நான் விதிக்க விரும்பவில்லை. அவரே விதித்துக் கொள்ள வேண்டும் என்றார் கருணாநிதி.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: