பருத்தித்துறையில் பழைய கற்கால ஆயுதங்கள் கண்டுபிடிப்பு – சிறிலங்கா வரலாற்றில் முதலாவது சான்று

சிறிலங்காவில் வரலாற்றுக்கு முந்திய பழையகற்கால கல் ஆயுதங்கள் யாழ்ப்பாணத்தில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பழைய கற்கால ஆயுதங்கள் சிறிலங்காவில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்று சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்கள
பிரதிப் பணிப்பாளர் கலாநிதி நிமால் பெரேரா தெரிவித்துள்ளார்.

பழைய கற்கால
மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் தென்னிந்தியா, தெற்காசியா, ஆபிரிக்கா
போன்றவற்றிலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த பழைய கற்கால
ஆயுதங்கள் பருத்தித்துறையை அடுத்துள்ள மணிக்கை என்ற இடத்தில் 1984ம் ஆண்டு
கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஆனால் போர்ச்சூழலினால் அங்கு அகழ்வாய்வு
மேற்கொள்ளப்படுவது நிறுத்தப்பட்டிருந்தாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கந்தரோடை அகழ்வாய்வுத் திட்டத்துடன் இணைந்ததாக, இந்தப் பகுதியில்
யாழ்.பல்கலைக்கழகத்துடன் இணைந்து தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வின் போதே
யாழ்.பல்கலைக்கழகப் பேராசிரியர் கிருஸ்ணராசாவினால் பழைய கற்கால கல் ஆயுதங்கள்
கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கலாநிதி நிமால் பெரேரா தெரிவித்துள்ளார்.

தாம்
இந்த கல் ஆயுதங்களை சோதனையிட்ட பின்னர், மேலதிக ஆய்வுக்காக கொழும்புக்கு கொண்டு
வந்து வரலாற்றுக்கு முந்திய கால தொல்பொருள் ஆய்வு நிபுணராக கலாநிதி சிரான்
தெரணியகலவிடம் ஒப்படைத்ததாகவும், அவர் மேற்கொண்ட ஆய்வுகளில் இவை பழைய கற்கால
ஆயுதங்களே என்று உறுதியாகியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சிறிலங்காவின் வரலாற்றுத் தொன்மை மிக்க நகரங்களாக அனுராதபுர, யாழ்ப்பாணம்,
திஸ்ஸமகராம, மாதோட்டம் ஆகியன இருப்பதாகவும், ஆனால் இதுவரை யாழ்ப்பாணத்தில்
வரலாற்றுக்கு முந்திய கால சான்றுகள் ஏதும் கிடைத்திருக்கவில்லை என்றும் கலாந்தி
நிமால் பெரேரா தெரிவித்துள்ளார்.

பழைய கற்கால ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட
பருத்தித்துறைப் பகுதியில் தொல்பொருள் திணைக்களம் தற்போது அகழ்வாய்வுகளை மேற்கொள்ள
ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “புதினப்பலகை”

மேலதிக தகவல்
விக்கிபீடியாவில்
இருந்து…

பழையகற்காலம்

பழையகற்காலம் என்பது,
மனித தொழில்நுட்ப வளர்ச்சிக் கட்டமான கற்காலத்தின் முதல் பகுதியாகும். இது சுமார்
2,000,000 ஆண்டுகளுக்குமுன், மனித மூதாதையர்களான ஹோமோ ஹபிலிஸ் (Homo habilis) போன்ற
ஹொமினிட்டுகள் (hominids) கற்கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியதுடன் ஆரம்பமானது.
இது, இடைக்கற்காலத்துடன் அல்லது, முன்னதாகவே புதியகற்கால வளர்ச்சி இடம்பெற்ற சில
பகுதிகளில், Epipaleolithic உடன் முடிவுற்றது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: