இரண்டாவது நாளாக தொடரும் உண்ணாவிரதம்: மோடிக்கு பெருகும் ஆதரவு

குஜராத் முதல் மந்திரி நரேந்திரமோடி மத நல்லிணக்கம், அமைதி, ஒற்றுமையை வலியுறுத்தி சத்பாவ்னா என்ற பெயரில் 3 நாள்(72 மணி நேரம்) உண்ணாவிரதத்தை நேற்று காலை ஆமதாபாத்தில் தொடங்கினார்.
குஜராத் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மண்டபத்தில் உண்ணாவிரதம் இருக்கிறார். தொடக்க நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத், பஞ்சாப் முதல் மந்திரி பிரகாஷ் சிங் பாதல், இமாசல பிரதேச முதல் மந்திரி பிரேம்குமார் துமால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று இரவு நரேந்திர மோடி உண்ணாவிரத மண்டபத்தில் உள்ள அறையில் ஓய்வு எடுத்தார். இன்று காலை மீண்டும் மேடைக்கு வந்து இரண்டாம் நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

அவரது உண்ணாவிரதத்தில் இந்து சாமியார்கள், துறவிகள் தவிர கிறிஸ்தவ பாதிரியார்கள், முஸ்லிம் தலைவர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் மேடைக்கு சென்று நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். உண்ணாவிரதத்திலும் பங்கேற்றனர்.

நரேந்திரமோடி உண்ணா விரதம் நாடு முழுவதும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் அணி அணியாக வந்து நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பொதுமக்களில் சிலர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை மனுக்களையும் அளித்தனர். அவற்றை நரேந்திர மோடி பெற்றுக் கொண்டார்.

பாரதீய ஜனதா தலைவர் நிதின்கட்காரிக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. அவர் சிகிச்சை பெற்று வருவதால் நரேந்திரமோடி உண்ணாவிரதத்துக்கு வரவில்லை. நரேந்திரமோடிக்கு போட்டியாக காங்கிரசார் ஆமதாபாத்தில் காந்தியின் சபர்மதி ஆசிரமம் அருகில் 3 நாள் போட்டி உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

முன்னாள் மத்திய மந்திரி சங்கர் சிங்கவகேலா மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா தலைமையில் ஏராளமான காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களும் இன்று இரண்டாம் நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: