88 வயது பெண்மணியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்த 30 வயது நபருக்கு மரணதண்டனை

88 வயது பெண்மணியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி மூச்சுத் திணறடித்து படுகொலை செய்த நபரொருவருக்கு வியாழக்கிழமை மாலை அமெரிக்க வேர்ஜினியா மாநிலத்தில் விஷ ஊசி ஏற்றி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஜெரி ஜக்ஸன் (30 வயது) என்பவருக்கே ரூத் பிலிப்ஸ் என்ற வயோதிப பெண்ணை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மேற்படி தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க மரணதண்டனை நிறைவேற்றங்களுக்கு கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த விஷ மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வேர்ஜினியா மாநில அதிகாரிகள், ஜெரி ஜக்ஸனுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு டென்மார்க்கைச் சேர்ந்த லண்ட்பெக் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட வலிப்பு மருந்தை பயன்படுத்தியுள்ளார்கள்.

இந்நிலையில் லண்ட்பெக் நிறுவனம் தனது உற்பத்தி தவறாக பயன்படுத்தப்படுவதாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இறுதியாக ஏதாவது கூற விரும்புகிறீர்களா என ஜெரி ஜக்ஸனிடம் வினவப்பட்டபோது அவர் “இல்லை’ என பதிலளித்துள்ளார்.

கடுமையான வலிப்பு நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் பென்டோபார்பிடல் என்ற மருந்தின் விநியோகம் தொடர்பில் டென்மார்க்கிலுள்ள லண்ட்பெக் நிறுவனம் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு முன், வேர்ஜினியாவின் ஜர்ரத் நகரிலுள்ள கிறீன்வில்லே கரெக்ஷன் நிலையம் மேற்படி மருந்துகளைப் பெற்று மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் லண்ட்பெக் நிறுவனத்தின் அமெரிக்க பேச்சாளர் மட் பிளேக் விபரிக்கையில், தாம் உயிர்களைப் பாதுகாப்பதற்கான வர்த்தகத்தை மேற்கொள்வதாகவும் அதற்கு முரணான வகையில் தற்போது அம்மருந்து உபயோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஜெரி ஜக்ஸனுக்கு 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலை தொடர்பாகவே மேற்படி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொள்ளையிடும் முகமாக குளியலறை ஜன்னலூடாக குறிப்பிட்ட வீடொன்றில் பிரவேசித்த ஜெரி ஜக்ஸன், தன்னை எதிர்கொண்ட ரூத் பிலிப்ஸை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்துள்ளார். அமெரிக்க மாநிலங்களில் முன்னர் மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு சோடியம் தியோபென்டல் என்ற நச்சு மருந்து பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் அம்மருந்தை உற்பத்தி செய்து வந்த ஒரேயொரு அமெரிக்க நிறுவனமான ஹொஸ்பிரா தனது உற்பத்தியை நிறுத்திவிட்டதாக 2010 ஆம் ஆண்டில் அறிவித்திருந்தது.

இதனையடுத்து அமெரிக்க மாநிலங்கள் மேற்கு லண்டனில் அக்ஷன் எனும் இடத்தில் செயற்படும் பிரித்தானிய நிறுவனமான ட்றீம் பர்மாவால் உற்பத்தி செய்யப்பட்ட சோடியம் தியோபென்டலை மரணதண்டனை நிறைவேற்றத்துக்கு பயன்படுத்த ஆரம்பித்தன.

எனினும் அம்மருந்துக்கும் 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பென்டோபார்பிடல் மரணதண்டனை நிறைவேற்றங்களுக்கு பயன்பட ஆரம்பித்தது. இந்நிலையில் இந்த வருடம் இம்மருந்தை உபயோகித்து அமெரிக்க மாநிலங்களில் 23 கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: