வன்முறைகள் தொடர்ந்தால் போர்க்கால சூழலுக்குள் செல்ல வேண்டி வரும் – கிழக்குப் படைகளின் தளபதி மிரட்டல்

கிழக்கில் மர்மமனிதன் விவகாரத்தினால் எழுந்துள்ள நெருக்கடிகள் பற்றி ஆராய நேற்று மட்டக்களப்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா இராணுவத்தின் கிழக்குப் படைத்தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா பொதுமக்களை, குறிப்பாக முஸ்லிம்களை கடுமையாக மிரட்டும் வகையில் உரையாற்றியுள்ளார்.

கிழக்கில் நூற்றுக்கணக்கில் சோதனைச்சாவடிகள் அமைத்து வாழ்வின் பெரும்பாலான நேரத்தை வீதியில் கழிக்க வைப்பேன் என்றும், வீடுகளுக்குள் புகுந்து சோதனையிட்டு கைது செய்வேன் என்றும், கடைகளை மூடவைத்து வியாபாரத்தை நடக்க விடாமல் கெடுப்பேன் என்றும் அவர் கண்டபடி அச்சுறுத்தியுள்ளார்.

கிழக்கு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கிழக்குப் பகுதி காவல்துறை, இராணுவ, அரச அதிகாரிகளும், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயப் பிரமுகர்கள் ஆலய நிர்வாகிகளும், பொது அமைப்புகளின பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா-

“ கிழக்கு மாகாணம் உட்பட அனைத்துப் பகுதியிலும் பரவி வரும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

“கிறீஸ் மனிதன்’,”மர்ம மனிதன்’ என்பதெல்லாம் வெறும் புரளிகள்.

பல்வேறு பகுதிகளிலும் சிறிலங்கா காவல்துறை மற்றும் படையினருக்கு எதிராக சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர்.

பயங்கரவாதம் நிலவிய போது தமது உயிர்களை கொடுத்து பாதுகாத்தவர்கள் மீதே மக்கள் தாக்குகின்றனர்.

ஒரு காலத்தில் முஸ்லிம் மக்களை புலிகள் கொலை செய்தபோது, அவர்களை காப்பதற்கு நாங்கள் உயிரைக் கொடுத்து போராடினோம். ஆனால், இன்று அவர்கள் எம்மீது கல்வீசித் தாக்குகின்றனர்.

இந்தச் சம்பவங்கள் படையினருக்கு சேறு பூசும் நோக்கிலானவை என்றே கருதுகிறோம்.

வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்களையும், கொள்ளைகளில் ஈடுபட்டு வருபவர்களையும், மரங்களை கடத்தி விற்றவர்களையும் சிறிலங்கா படையினரும்,காவல்துறையினரும் பிடித்து வருவதால் ஆத்திரமுற்றவர்களே இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

பொதுமக்கள் கலவரங்களையும் தாக்குதல்களையும் மேற்கொள்ள முனைந்தால் மீண்டும் கிழக்கில் முன்னர் நிலவிய நிலையே ஏற்படும்.

மீற்றருக்கு ஒரு சோதனைச்சாவடி ஏற்படுத்தப்படும். சுற்றிவளைப்புகள் இடம்பெறும். அரை மணித்தியாலத்திற்குள் செல்லும் பயணங்கள் இரண்டு மணித்தியாலங்கள் எடுக்கும்.

இதனை விரும்பினால் எதனையும் செய்யலாம்.

பொத்துவில் நிலைமையை அவதானிப்பதற்காக இரண்டு டாங்கிகளை எடுத்துக் கொண்டு சென்றபோது காத்தான்குடி காவல்நிலையத்துக்கு முன்பாக ரயர்களை எரிகின்றன. அந்த ரயர்களை அப்புறப்படுத்தி விட்டே சென்றேன்.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் எமது டாங்கிகளையும் கவசவாகனங்களையும் மூடி வைத்துள்ளோம். இயந்திரத் துப்பாக்கிகளை அறைகளில் பூட்டி வைத்துள்ளோம்.வீதித்தடைகள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்தியுள்ளோம்.

முன்னர் புனானையிலிருந்து இங்கு வருவதற்கு எனக்கு இரண்டு மணித்தியாலம் எடுக்கும். ஆனால் தற்போது வெலிக்கந்தையிலிருந்து இங்கு வருவதற்கு எனக்கு 40 நிமிடமே எடுக்கிறது.

உங்களுக்கு அந்தக் காலத்துக்கு செல்ல விருப்பமா?

இது தொடர்பாக பாதுகாப்பு செயலருடன் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளேன்.

கிழக்கு மாகாணத்தில் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் நூற்றுக்கும் மேற்பட்ட வீதித்தடைகளை ஏற்படுத்துவேன்.

மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிக்குடிக்கு செல்வதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் செல்லும். உங்கள் வாழ்நாளில் அதிககாலத்தை வீதிகளில் கழிக்க வேண்டி வரும்.

சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகள் ,வீதித்தடைகள், ஏற்படுவது உங்களுக்கு விருப்பமா? வீட்டுக்கு வந்து படையினர் தேடுதல்களை மேற்கொள்வது உங்களுக்கு விருப்பமா?

அது விருப்பமானால் வீதிகளில் போட்டு ரயர்களை எரியுங்கள்.

இவற்றுக்கெல்லாம் சரியான ஊசிமருந்து எங்களிடம் உள்ளது. ஒரு மாதத்துக்கும் ஊசிமருந்து கொடுக்கலாம், ஒரு கிழமைக்கும் ஊசிமருந்து கொடுக்கலாம், ஒரு நாளைக்கும் ஊசிமருந்து கொடுக்கலாம்.

இதன் காரணமாக கடைகளை மூட வேண்டி வரும். வியாபாரத்துக்கு தடங்கல்கள் ஏற்படும்,வீடுகளை சோதனை செய்யும் நிலைமை ஏற்படும்.
மீண்டும் ஒரு போர்ச்சூழலுக்குள் நீங்கள் தான் போவீர்கள்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முந்திய நிலைமையை ஏற்படுத்த எனக்கு பத்து நிமிடங்கள் கூடத் தேவையில்லை.

படையினர் தான் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இராணுவத்துக்கு வேறு வேலைகள் இருக்கின்றன. கிறீஸை பூசிக்கொண்டு இவ்வாறான வேலைகளை செய்வதற்கு நேரமும் இல்லை தேவையும் இல்லை.“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.(புதினப்பலகை )

Advertisements

ஒரு பதில்

  1. ethu eppiti irukku .ivanta pessu.ivanta aakkal thaan seikiraanuval.ithu suvar

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: