சிறிலங்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஐ.நா மீண்டும் வலியுறுத்துகிறது

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளின் படி சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐ.நா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன் சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கைக்கு இதுவரை அதிகாரபூர்வமான பதிலை வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையின் சில பகுதிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளித்துள்ளதாக இம்மாத முற்பகுதியில் கூறியிருந்தார்.

இதற்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்கத் தவறினால், எதிர்க்கட்சிகள் தவறுகளைக் கண்டுபிடிக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆனால், சிறிலங்கா அரசிடம் இருந்து ஐ.நாவுக்கு முழுமையான பதில் கிடைக்கவில்லை என்றும், விரைவில் பதில் கிடைக்கும் என்று நம்புவதாகவும் ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறியுள்ளார்.

ஐ.நா அறிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டிய பரிந்துரைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவற்றை சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்றும் பர்ஹான் ஹக் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisements

ஒரு பதில்

  1. கொலைக்காரரிடம் போய் நீதியை எதிர்பார்கலாமா? இத்தனை காணோளிகள் நிழல் படங்கள் சாட்சிக்கு இருக்கும் போது ஐநா ஏன் நேரடியாக நடவடிக்கை எடுக்கக் கூடாது. இன்னும் ஒரு நாட்டில் இப்படிப்பட்ட இனவழிப்பு அட்டூழியம் ஏற்பட முன் எல்லா அரச பயங்கரவாதிகளுக்கும் ஒரு பாடமாக இருப்பதற்கு சிங்கள இனவெறி கொலைவெறி யரை சட்டத்தின் முன் கொண்டுவர முயலுங்கள். கொலைஞரிடம் திருவாசகம் படிக்கச் சொல்லாமல் உடனடி நடவடிக்கை தேவை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: