• RSS தெரியாத செய்தியோடை

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS tharavu

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS kadukathi.com

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS சினிமா நியூஸ்

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • More than a Blog Aggregator
 • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

  Join 270 other followers

 • xxx

 • Advertisements

நான் ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் தான் ஆகிறது.எனக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது

19.6.2011 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற அரசு விழாவில்  தமிழக முதலமைச்சர்   ஜெயலலிதா ஆற்றிய உரையாற்றினார்.

அவர்,   ‘’மனித உறவுகளை மேம்படுத்துவதில் நன்றி மனப்பான்மை மிகவும் முக்கியமானது. அதனால் தான் எனது நன்றியை எழுத்தினால் தெரிவித்தாலும் போதாது; நாவினால் சொன்னாலும் போதாது என்று கருதி, அதைத் திட்டங்கள் வடிவில் உங்களுக்கு அளிக்க வேண்டும் என்பதற்காகத் தான் நான் இங்கு வந்திருக்கிறேன். நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அரசு சார்பில் நடத்தப்படும் முதல் கூட்டம் இது தான் என்பதையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 எனது தலைமையில் அமைந்துள்ள இந்த அரசு, ஏழை எளிய மக்களுக்கு நேரடியாக பயன் தரக்கூடிய மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில் தான், மக்கள் நலனை முதன்மைப்படுத்தி, தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வண்ணம் பல முக்கிய திட்டங்களுக்கு நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற அன்றே உத்தரவிட்டேன்.

 

      ஏழை, எளிய மக்களுக்கு முழுமையான உணவுப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதால், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசிக்கு மக்கள் எந்த விலையையும் கொடுக்க வேண்டியதில்லை என்று இலவசமாகவே அரிசியை வழங்க உத்தரவிட்டேன். இதன் மூலம், தமிழக மக்கள் உணவு பாதுகாப்பு என்பதை ஒரு உரிமையாகவே பெற்று விட்டனர். 

 

 

 
அதைப் போன்று,  மகளிருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கும் திருமண உதவி திட்டத்துடன், தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கி உத்தரவிட்டேன். 

ஒரு ஆண் கற்றறிந்தவனாக இருந்தால், அந்தக் கல்வி அவனுக்கு மட்டும் தான் பயன்படும். ஆனால், ஒரு பெண் படித்து, அதன் மூலம் கற்றறிந்தவளாக இருந்தால், அவள் மூலம் அந்தக் குடும்பமே கல்வி அறிவு பெற்றுவிடும். எனவே, இளங்கலை பட்டம் மற்றும் பட்டயம் படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையை 50 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தி வழங்கியதோடு, தாலிக்கான 4 கிராம் தங்கத்தையும் வழங்க உத்தரவிட்டேன்.

 

அது போல, அரசிலிருந்து பெறப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தையே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள, முதியோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள், ஆகியோருக்கு வழங்கப்படும்  மாத உதவித் தொகையை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டேன்.

 

 மேலும்,  மீன் இனப்பெருக்கக் காலத்தில், மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள காலத்தில், மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 1000 ரூபாயிலிருந்து, 2000 ரூபாயாக இரட்டிப்பாக்கி உத்தரவிட்டேன்.

 

 மனித வள மேம்பாட்டிற்காக எனது அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அதன் அடிப்படையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து பதினொன்று மற்றும் பன்னிரென்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கும்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவியருக்கும் இலவசமாக மடிக் கணினி வழங்கும் திட்டத்தை எனது அரசு செயல்படுத்த உள்ளது. இந்த ஆண்டு சுமார் 9 லட்சம் மாணவ மாணவியருக்கு மடிக் கணினி வழங்கப்படும்.
வறுமையை முழுமையாக அகற்றுவதை தன் தலையாய கொள்கையாக எனது அரசு கொண்டுள்ளது. உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதோ, பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படுவதோ மட்டும், நாட்டிற்கு உகந்த வளர்ச்சி அல்ல என்பதே என்னுடைய  தீர்க்கமான கருத்து ஆகும்.  எனவே தான், பொருளாதார வளர்ச்சி ஏழை எளிய மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளேன். 

 

ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற, சில சலுகைகள் அவசியம் என்பதால் தான் கிராமப்புற ஏழைகள் பயன்பெறும் வகையில் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் என்ற புதுமையான திட்டத்தை எனது அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 இத்திட்டத்தின்படி, கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு, சுமார் 300 சதுர அடி அளவில், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில், அரசே வீடு கட்டி கொடுக்கும். அதைப் போல, நகர்ப்புற ஏழைகளின் வீட்டு வசதிக்காக, ஒரு புதிய திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்த உள்ளது. 

 

இந்த அடிப்படையில் தான், மகளிருக்கு மின் விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்கும் திட்டத்தை நான் செயல்படுத்த உள்ளேன்.  இந்த திட்டம், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15ந்தேதி முதல் செயல்படுத்தப்படும்.

 

நான் ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் தான் ஆகிறது.  ஆட்சி பொறுப்பேற்ற பின், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாக சூழ்நிலையைப் பார்த்த போது, எனக்கு கடும் அதிர்ச்சி தான் ஏற்பட்டது.

 

 முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு அனைத்துத் துறைகளிலும் பல்வேறு குளறுபடிகளை செய்து, நிர்வாகத்தையே சீரழித்துள்ளது. துறை தோறும், துறை தோறும், உள்ள குளறுபடிகளை நான் சீர்படுத்தி, ஒழுங்குபடுத்தி வருகிறேன். இதுவே, ஒரு மாபெரும் சவாலாக அமைந்துள்ளது.

 

 இப்படிப்பட்ட, கடும் சவாலுக்கு மத்தியில் 190 கோடி ரூபாய்க்கும் அதிகமான திட்டங்களுடன் நான் இங்கு வந்துள்ளேன்.

 

 முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில், கருத்திலேயே, திட்டங்களிலேயே பிழை இருந்தது என்பதால் தான், அவர்களது திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு பயன்படாமல் அவர்களுக்கே பயன்படும் திட்டங்களாக இருந்தன.

 

எங்கள் அரசு, தற்போது கொண்டு வந்துள்ள திட்டங்கள் அனைத்தும், மக்கள் நலனை முன்னிறுத்தியே கொண்டு வரப்பட்டுள்ள திட்டங்கள். தமிழக மக்களைத் தவிர, வேறு யாரும் இந்த திட்டங்களின் மூலம் பயன்பெற இயலாது. இந்த திட்டங்கள் மூலம், தமிழக மக்களின் வாழ்க்கை வளம் பெறும்; மனித வளம் மேம்படும்; மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

 

 ஏழை, எளிய மக்களுக்கு ஒரு புறம் சலுகைகளை வழங்குவதும்; மறுபுறம் வாழ்க்கைக்கு தேவையானவற்றை அவர்களே வாங்கிக் கொள்ளும் வகையில், அவர்களது பொருளாதார நிலையை மேம்படுத்துவதும் ஆகிய இரு வேறு நிலைகளில், பல்வேறு நடவடிக்கைகளை எனது அரசு மேற்கொண்டு வருகிறது. 

 

தேர்தல் சமயத்தில், நான் இங்கு பிரச்சாரம் செய்ய வந்த போது, பக்தர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள்; ஸ்ரீரங்கம் நகரம் மற்றும் மணிகண்டம், மணப்பாறை, அந்தநல்லூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை வசதிகள்; பேருந்து வசதிகள்; குடிநீர் வசதிகள்;  மருத்துவமனை வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தித் தருவேன் என நான் வாக்குறுதி அளித்திருந்தேன்.

 

 எனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகத்தான், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு மட்டும் முதற்கட்டமாக, மொத்தம் 190 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் வழங்க உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மீதமுள்ள வாக்குறுதிகளும், படிப்படியாக நிறைவேற்றப்படும் என்பதையும் உங்களுக்கு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று பேசினார்.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: