சனல் 4 ஒளிபரப்புவதை தடுக்கும் முயற்சியில் சிறிலங்கா!

உண்மையை மறைத்து நீதிக்கு முட்டுக்கட்டை போடுவதில் அவப்பெயரைக்கொண்ட நாடு என்று நீண்ட கால சாதனை படைத்து வரும் ஸ்ரீலங்காவை சனல் 4 காட்டிய கொலைக்களம் என்ற புதிய ஒருமணி நேர வீடியோ சர்வதேசத்தின் முன் அம்பலப்படுத்தியுள்ளதாக நீதிக்கும் சமாதானத்திற்காகவுமான இயக்கத்தின் பணிப்பாளர் பிரெட் கார்வர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சனல் 4 ஜூன் 14 ஆம் திகதி ஒளிபரப்பவிருக்கும் கொலைக்களம் என்ற புதிய ஒரு மணி நேர விடியோ படம் பற்றி நீதிக்கும் சமாதானத்திற்குமான இயக்கத்தின் பணிப்பாளர் பிரெட் கார்வர் கருத்துத் தெரிவித்தார்.

இப்படம் கலங்கச்செய்வதாகவும், நடந்த உண்மைகளை மேலும் உறுதிப்படுத்துவதாகவும் அவர் சொன்னார்.யுத்தத்தின் கடைசி மாதங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஸ்ரீலங்காவில் கொல்லப்பட்டனர். அவர்களில் பலர் காட்டுமிராண்டித்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர் என்று ஐநாவின் நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயல்கள் இடம்பெறவில்லை என்று பாசாங்கு செய்வதன் மூலம் நாம் எவருக்கும் சேவை செய்யப்போவதில்லை. நிலைத்து நிற்கக்கூடிய சமாதானத்திற்கு உண்மை சொல்லப்பட்டேயாக வேண்டும். இவ்விடியோ படம் பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமானதாக இருக்கும். ஆனால் அப்படத்தை காண்பிப்பதற்கு சனல் 4 எடுத்த முடிவை பாராட்டுகின்றோம்.

இப்போது என்ன தேவையென்றால், இப்போர்க்குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஐநாவின் பொதுச்செயலாளர் தாம் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையின்படி சுதந்திர சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை அமைக்க வேண்டும் என ஸ்ரீலங்காவில் நீதிக்கும் சமாதானத்திற்குமான இயக்கத்தின் பணிப்பாளர் பிரெட் கார்வர் தெரிவித்துள்ளார்.

Ofcom க்கு தெரிவித்து இரகசியமான முறையில் முறைப்பாட்டுக்காரரின் அடையாளத்தை மறைத்து இவ்விடியோ படத்தைத் திரையிடுவதைத்தடுக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா ஈடுப்பட்டுள்ளது பற்றி நீதிக்கும் சமாதானத்திற்குமான இயக்கத்தின் பணிப்பாளர் பிரெட் கார்வர் கருத்துத் தெரிவிக்கையில்உண்மையை மறைத்து நீதிக்கு முட்டுக்கட்டை போடுவதில் அவப்பெயரைக்கொண்ட நாடு என்று நீண்ட கால சாதனை படைத்தது ஸ்ரீலங்கா.

ஸ்ரீலங்காவின் இந்த அச்சுறுத்தல்கள் உண்மைகள் வெளிவராமல் தடுக்கும் முயற்சிகள் மக்களின் அவல நிலை குறித்து கவனமெடுப்பவர்கள் முயற்சியை மௌனமாக்கும் செயலாகும். உலகில் ஊடகத்துறை அடக்குமுறை அரசாங்கம் என்ற வரிசையில் ஸ்ரீலங்கா 4 ஆவது இடத்தை பெற்றுள்ளது என்று ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு அடையாளப்படுத்தியுள்ளது என்பதையும் ஸ்ரீலங்காவில் நீதிக்கும் சமாதானத்திற்கான இயக்கத்தின் பணிப்பாளர் பிரெட் கார்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: