• RSS தெரியாத செய்தியோடை

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS tharavu

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS kadukathi.com

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS சினிமா நியூஸ்

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • More than a Blog Aggregator
 • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

  Join 270 other followers

 • xxx

 • Advertisements

சிறிலங்கா: இந்தியாவினதும், ஜெயலலிதாவினதும் கொள்கை நிலைப்பாடுகள் என்ன?

சரியான தருணத்தில் ஜெயலலிதாவின் ஆதரவு தமிழ் மக்களுக்கு கிடைத்ததை, உலகம் பூராவும் வாழும் தமிழ் மக்கள் வரவேற்றுள்ளனர். இருப்பினும், இந்திய வெளியுறவுக் கொள்கையை வகுப்பதில் மாநிலங்களுக்கு எத்தகைய அதிகாரங்கள் உள்ளன? என்கின்ற கேள்வி எழும்பியுள்ளது.

இக்கேள்விக்கான பதிலை Indian Express ஊடகத்தில் ஆய்வாளர் வி.சூரியநாராயணன் எழுதியுள்ளார். அதனை ‘புதினப்பலகை’க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்காவில் இடம் பெற்ற நான்காம் கட்ட ஈழப் போரில், சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தி, உண்மையான குற்றவாளியை கண்டுபிடிப்பதுடன், சிறிலங்காத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு நீதியானதோர் தீர்வை வழங்குவதை உறுதிப்படுத்துதல் தொடர்பாகவும், சிறிலங்கா மீதானது தனது கொள்கையை இந்திய மத்திய அரசு மீள்பரிசீலிக்கவும் அதன் மீது தான் அழுத்தம் கொடுப்பேன் என, அண்மையில் தமிழ்நாட்டில் இடம்பெற்ற சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்று முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதா ஊடகவியலாளர்களுடனான தனது முதற் சந்திப்பில் தெரிவித்துக் கொண்டார்.

சரியான தருணத்தில் ஜெயலலிதாவின் ஆதரவு தமிழ் மக்களுக்கு கிடைத்ததை, உலகம் பூராவும் வாழும் தமிழ் மக்கள் வரவேற்றுள்ளனர். இருப்பினும், இந்திய வெளியுறவுக் கொள்கையை வகுப்பதில் மாநிலங்களுக்கு எத்தகைய அதிகாரங்கள் உள்ளன? என்கின்ற கேள்வி எழும்பியுள்ளது.

இந்தியா போன்ற பெரிய நாடுகளின் தனது அயல்நாடுகள் தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையானது ஏதாவது பிரச்சினைகளால் அல்லது குழப்பத்தால் திடீரென முறிவுக்கு வந்துவிடுவது வழமையானதாகும்.

இந்திய-பாகிஸ்தான் உறவின் விரிசலானது ஜம்மு-காஷ்மீர், பஞ்ஜாப், ராஜஸ்தான், மற்றும் குஜராத் மாநிலங்களின் பிரச்சனையானது.

இதைப் போன்றே, சீனாவுடனான இந்திய உறவின் விரிசல் அருணாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தர பிரதேசம், உத்தராஞ்சல், ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரச்சினைகளுக்கான காரணமாகும்.

இந்திய –பூட்டான் உறவின் சிக்கல், மேற்கு வங்காளம், அசாம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் போன்ற மாநிலங்களில் பிரச்சினைகள் ஏற்பட வழிவகுத்தது.

இதையொத்ததாகவே, மியான்மார் நாட்டுடனான உறவில் ஏற்பட்ட விரிசலானது அருணாச்சல பிரதேசம், மிசோரம், நாகலாந்து, மணிப்பூர் போன்றவற்றில் பிரச்சினைகளை ஏற்படுத்தியது.

இந்திய – பங்காளதேஷ் உறவில் ஏற்பட்ட சிக்கல் மேற்கு வங்காளம், மெகாலயா, திரிபுர, அசாம் போன்ற இடங்களில் ஏற்பட்ட பிரச்சினையானது

இவற்றை ஒத்ததாகவே இந்தியாவின் சிறிலங்கா தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் ஏற்படும் மாற்றம் தமிழ்நாட்டிலும் பிரச்சனைகளை உண்டு பண்ணும்.

இந்தியாவின் அரசியல் யாப்பின் பிரகாரம், வெளிநாட்டுக் கொள்கைகளை உருவாக்குவதும் நடைமுறைப்படுத்தவதும் மத்திய அரசாங்கத் தால் மட்டுமே மேற்கொள்ளப்பட முடியும்.

ஆனால் உண்மையில், தனது மாநில அரசுகளின் நலனைக் குழி தோண்டிப் புதைக்கும் வகையில் இந்திய மத்திய அரசு அது சார்ந்த வெளியுறவுக் கொள்கையை சில சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்தவகையில், இவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்திய மத்திய அரசிற்கும் மாநில அரசுகளிற்கும் இடையில் பிளவுகளை உருவாக்கியுள்ளன.

ஆனால், இது இந்தியா மட்டும் சந்தித்துள்ள பிரச்சினையாக இருக்கவில்லை. அமெரிக்கா, சீனா, முன்னாள் சோவியத் யூனியன் போன்ற நாடுகளிலும் இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெற்றுள்ளன.

யூகோசிலோவியா உடைவதற்கு முன்னர் அங்கிருந்த அனைத்து மாநிலங்களும் தமக்கான வெளியறவுவிடயங்களைக் கையாள்வதற்கான துறைசார் பிரிவுகளை வைத்திருந்தன.

சகல மாநிலங்களும் தமக்கான பிரத்தியேக வெளியுறவுக் கொள்கைகளை கொண்டிருக்க வேண்டும் என்பதை நான் இதன் ஊடாகக் குறிப்பிடவில்லை. மாறாக, நான் கேட்பது என்னவென்றால், பூர்வீக இந்திய மாநிலங்களின் விருப்பங்களும் மத்திய அரசால் பாதுகாக்கப்படுவதான ஒரு ஆட்சிமுறை இருக்க வேண்டும்.

தமிழ் நாட்டிற்கு நன்மையான ஒரு விடயம், இந்திய மத்திய அரசிற்குப் பாதகமாய் இருக்கும் அன்று அர்த்தம் இல்லை. இன்னொரு வகையில் சொல்வதானால், மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகள் வகுக்கப்படும் விவகாரத்தில், மாநில அரசுகளினது ஆலோசனைகளும் பெறப்பட வேண்டும்.

சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது எவ்வாறு தமிழ்நாட்டு நலனைப் பாதித்துள்ளது என்பதற்கு இங்கு சில எடுத்தக்காட்டுகள் உண்டு.

சிறிலங்காவிலிருந்த இந்தியத் தமிழர்கள் உடனடியாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்படுவதற்காக 1964 இல் சிறிமாவோ-சாஸ்திரி உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டபோது சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை தொடர்பாக எவரும் கவனத்தில் எடுக்கவில்லை. அப்போது தமிழ்நாட்டிலிருந்த காமராஜ் நாடர், வி.கே.கிருஸ்ண மேனன், சி.என்.அண்ணாத்துரை, பி.ராமமூர்த்தி போன்ற முக்கிய அரசியல் தலைவர்கள் இந்த உடன்படிக்கை தொடர்பாக தமது எதிர்ப்புக்களை தெரிவித்திருந்தனர்.

எவ்வாறிருப்பினும், இந்தியாவில் பிறந்து சிறிலங்காவில் வாழ்ந்த மக்களின் நலன்களை பாதுகாப்பதை விட சிறிலங்கா அரசாங்கத்தின் உறவினை மேலும் வலுப்படுத்துவதிலேயே, அப்போது இந்தியாவின் பொது நலவாய செயலாளராக இருந்த சி.எஸ் ஜா வின் ஆலோசனையைப் பெற்றிருந்த இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி செயற்பட்டார்.

1974, 1976 களில் இந்திய-சிறிலங்கா கடல் எல்லை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் இதற்கான இரண்டாவது எடுத்துக்காட்டாகும்.

இந்த உடன்படிக்கையால், ராஜா ராம்நாத்தின் சமிந்தரிக்குச் சொந்தமான கச்சதீவானது சிறிலங்காவிற்குத் தாரைவார்த்துக் கொடுத்தது மட்டுமல்லாது, இந்திய மீனவர்களால் கச்சதீவில் காலதிகாலமாக மேற்கொள்ளப்பட்ட மீன்பிடிக்கும் உரிமையும் பறிபோனது.

இதையொத்தாகவே, 1950ல் இந்திய மத்திய அரசாங்கம், பேரு பரியை [Beru Bari] கிழக்கு பாகிஸ்தானுக்கு தாரை வார்த்துக் கொடுக்க முற்பட்டபோது, அவ்வேளையில் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சராக இருந்த B.C.றோய், இந்திய மத்திய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தொடுத்து அதில் வெற்றியும் கண்டார்.

இதன் மூலம், இந்தியாவின் நிலப்பகுதியைக் கிழக்கு பாகிஸ்தானிடம் கைமாற்றப்படுவதற்காக மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை தோற்கடிக்கப்பட்டது.

இந்த நிலையில், 1974 இல் இந்தியாவால் கச்சதீவு சிறிலங்காவிற்குக் கைமாற்றப்பட்ட போது, அப்போது தமிழ்நாட்டை ஆண்ட திராவிட முன்னேற்றக் கழகம் அதற்கெதிராக ஏன் எவ்வகையிலான சட்ட ரீதியான முயற்சியையும் எடுக்கவில்லை என்பதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இவற்றின் விளைவாக, பாக்கு நீரிணையில் சிறிலங்காவின் பக்கமிருக்கும் செறிந்த மீன்பிடிக் கடல் இந்திய மீனவர்களுக்கும் சிறீலங்கா கடற்படையினருக்குமிலையிலான முறுகல் கடலாக மாறி, ஏராளமான இந்திய மீனவர்களின் உயிர்களைக் குடித்தது)

தனது அயல்நாட்டிற்குள் இடம்பெறும் நகர்வுகளில் இந்தியாவின் தலையீடானது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அமைந்திருக்கும் என்பது தெட்டத் தெளிவானதாகும்.

ஆனால், சிறிலங்காவைப் பொறுத்தளவில், 1983ல் லோக் சபாவில் உரையாற்றிய அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சுட்டிக்காட்டியது போல, அது ‘வெறும் இன்னொரு நாடல்ல’ என்பதும், அதன் உறுதித்தன்மையில் மட்டுமல்லாமல், அங்கு வாழும் தமிழ் மக்களின் கௌரவத்திலும் நலனிலும் கூட இந்தியாவின் நலன்கள் தங்கியுள்ளன.

இந்த பின்னணியில், தம் மீதான மனித உரிமை மீறல்களைச் சர்வதேச மயப்படுத்துவதில் தமிழர்களுக்கு இந்தியா உதவியது மட்டும் அல்லாமல், தமிழர் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு காண முயற்சித்தால், இந்தியா வெறுமனே பார்த்துக்கொண்டிருக்காது என்பதையும் சிறிலங்கா அரசாங்கத்திற்குத் தெளிவுபடுத்தியது.

இத்தகைய செயற்திறனான கொள்கையுடனேயே, மே 1987ல் யாழ்ப்பாணத்தில் இந்திய விமானங்கள் உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் வீசின. எந்த ஒரு நாடுமே அப்போது இந்தியாவிற்கு எதிராக ஒரு விரலைக் கூட நீட்டவில்லை.

ஆனால் 1987 இலிருந்து, சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் கொள்கையானது தனது மிக மோசமான நிலைக்கு மாறத்தொடங்கியது. விடுதலைப் புலிகளிற்கு எதிரான போர், தமிழ் மக்களுக்கு எதிரான போராக சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட ஈழப்போரில், 40,000 இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டபோது, இந்தியா வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

இவற்றோடு சேர்த்து, ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்காவிற்கு இந்திய பாதுகாப்பை வழங்கியது. இதில் வெட்கக்கேடு என்னவெனில், ரஸ்யா, சீனா கும்பலோடு சேர்ந்தே இந்தியாவும் சிறிலங்காவிற்கான ஆதரவை வழங்கியது.

ஆனால் சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் கொள்கையில் சிறிலங்கா அரசாங்கம் சார்பான கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டால், தமிழ்நாடு வெறுமனே பார்வையாளராக இருந்துவிடாது என்பதை தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பதவியேற்பு உரை உறுதிப்படுத்தியுள்ளது.

V Suryanarayan is senior research fellow, Center for Asia Studies.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: